இம்முறை O/L பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் இன்று தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த அனுமதி அட்டைகளை காலதாமதமின்றி பரீட்சார்த்திகளிடம் வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமாயின், அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முதல் அறிவிக்கப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இம்முறை பரீட்சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 மாணவர்கள் தோற்றவுள்ளதாக திணைக்களம் கூறுகின்றது.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 4300 பரீட்சை நிலையங்களில், டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
Post a Comment