அம்பாரை மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு
(ஏ.ஜீ.ஏ.கபூர்)
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் சர்வதேச குடியிருப்பாளர் தினவாரத்தை முன்னிட்டு ஜனசெவன உபஹார பத்து லட்சம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு 04.10.2013 வெள்ளிக்கிழமை அம்பாரை நகரசபை கூட்ட மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாரை மாவட்ட முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன,வீடமைப்பு நிருமான ,நீர்வழங்கள, கிராமிய மினசார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்கள் கலந்து கொண்டார், கௌவ அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர அவர்களின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.பி.ஹேரத், ஷிராணி விஜேவிக்ரம அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டி.லங்காரத்ன மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அம்பாரை பிரதேச செயலாளர், மக்கள்வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஈ.சோமசந்திர உட்பட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை மாவட்ட முகாமையாளர் ஏ.அஸீஸ், அம்பாரை மாவட்ட அலுவலக வீடமைப்பு உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் , கடன் பெறும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வற்றுடன் இணைந்து செயற்படுத்தும் இந்த செயற்றிட்டத்தின் கீழ் . மக்கள் வங்கி ஊடாக 86 உத்தியோகத்தர்களுக்கும், இலங்கை வங்கி ஊடாக 36 உத்தியோகத்தர்களுக்கும், தேசிய சேமிப்பு வங்கி ஊடாக 10 உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 132 உத்தியோகத்தர்களுக்கு முதற் கட்ட கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆகக் கூடிய கடன் தொகையாக 350,000.00 ருபா ஒருவருக்கு 13 வீத வருடாந்த வட்டியினடிப்படையில் இக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
பயனாளிகளுக்கான முதற் கட்ட கொடுப்பனவுக்கான காசோலைகளை மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத்,பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர அவர்களின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.பி.ஹேரத், ஷிராணி விஜேவிக்ரம அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டி.லங்காரத்ன மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அம்பாரை பிரதேச செயலாளர், பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஈ.சோமசந்திர உட்பட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமையாளர் பி.எஸ்.கலன்சூரிய ஆகியோர்கள் வழங்கி வைத்தார்கள்.
Post a Comment