Header Ads



பரபரப்பான சூழ்நிலை - இன்று தீர்க்கமான நாள்

(எம்.ஏ.எம்.நிலாம்)

மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஐ.தே. கட்சியின் செயற்குழுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று 7-10-2013  மாலை சிரிகொத்தாவில் கூடுகிறது. இன்றைய கூட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுகிறது.

ரணில் தலைமைத்துவத்திலிருந்து உடன் இராஜினாமா செய்ய வேண்டுமென பிக்குமார் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார். கருஜயசூரிய தலைமையிலான தலைமைத்துவ சபை மூலம் ஐ.தே.க.வை நிர்வகிக்க வேண்டும். அச்சபையில் உறுப்பினர்கள் 05 பேருக்கும் 09 பேருக்கும் இடையில் அமைய வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.

கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலகத் தீர்மானம் எடுப்பதற்காக இரு தினங்களை ரணில் கேட்டதாகவும், இன்று தீர்க்கமான நாள் என்றும் சுமங்கல தேரர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதனுடன் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு அனுப்புவதாகவும் தொடர்ந்து அவர் தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக்கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக் கிழமைமாலை இணக்கம் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக  திங்கட்கிழமை கூடவிருக்கும் கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருப்பதாக தெரிய வருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தம்ம கித்தியாராம (பொல்வத்த விகாரை) வில் இடம்பெற்ற முக்கிய மகா சங்கத்தினருடனான சந்திப்பின் போதே ரணில் விக்கிரம சிங்க தலைமைத்துவப் பதவியிலிருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பாரிய நெருக்கடியை முடிவுக் குக் கொண்டு வரும் பொருட்டு அநுராதபுரம் சாரானந்த பிரிவெனாபதி கிராம்பே ஆனந்த ரோ தலைமையிலான 12 மகா சங்கத்தினர்களுடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பில் கட்சியை வழிநடத்துவதற்கு 7 பேரடங்கிய உயர் சபையை அமைப்பது தொடர்பாக ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயப்படும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தான் தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக மகா சங்கத்தினர்களிடம் எடுத்துரைத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினர்கள் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்து 7 பேரடங்கிய தலைமைத்துவக் குழுவை அமைத்து செயற்படுமாறு வேண்டுகேள் விடுத்துள்ளனர். அது குறித்து தாம் ஆராய்வதாகவும் தமது முடிவை செயற்குழுக் கூட்டத்தின்பின்னர் அறிவிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் திங்கட்கிழமை இடம்பெற இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிக முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் முக்கிய திருப்பங்கள் இடம்பெறக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. ஏற்கனவே செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்ட கரு ஜயசூரிய அப்பதவியை ஏற்க மறுத்ததால் புதிதாக அமைக்கப்படவிருக்கும் உயர்சபை, அல்லது தலைமைத்துவச் சபைக்கு அவரால் வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் நாளைய செயற் குழுகூட்டத்தின் போது கரு ஜயசூரியவை மீண்டும் செயற்குழுவுக்குள் கொண்டுவரும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது. எவ்வாறெனினும் கரு ஜயசூரிய தலைமையிலேயே இந்த உயர்சபை அமைய வேண்டுமென்பதிலேயே ஸ்ரீ கொத்தா வட்டாரம் உறுதியான நிலைப்பாட்டிலிருப்பதாக தெரிய வருகின்றது. 

எதிர்காலத்தில் கட்சியிலிருந்து எவரும் வெளியேறுவதைத் தவிர்க்கும் பொருட்டே மகா சங்கத்தின் பௌத்த பிக்குகள் இந்த முயற்சியிலீடு பட்டதாகவும் அதில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை கட்சியிலிருந்து ஓரங்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளை மகாசங்கத்தினர்கள் தடுத்து அவரையும் சேர்த்தே தலைமைத்துவக்குழு அமைக்கப்பட வேண்டுமென்ற முடிவை எடுத்துள்ளனர். எனினும், திங்கட்கிழமை கூடும் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முக்கிய திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என நம்பகமாகத் தெரிய வருகின்றது. மகா சங்கத்தினருடனான சந்திப்பில் கரு ஜயசூரியவோ, சஜித் பிரேமதாஸவோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துரந்தால் ஆளும் கட்சியின் பக்கம் அமர்வதற்கு வாய்ப்புக்ள் அதிகம்தான்..... பலருக்கு அந்த வாய்ப்பை கொடுத்த ரனில் விக்கிரமசிங்க அவர்கள் தானும் பயன்படுத்திக்கொள்வது ஐக்கிய தேசியக்கட்சியை மேலும் பலப்படுத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.