கல்முனை சாஹிரா கல்லூரி விவகாரம் தொடருகிறது
கல்முனை சாஹிராவில் இன்றும் மாணவர்கள் வகுப்புக்களை பகிஸ்கரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் .குறித்த ஆசிரியர் இருவரை இடமாற்ற செய்ய கோரியே இந்த பகிஸ்கரிப்பும் ஆர்பாட்டங்களும் இடம் பெறுகின்றன . இந்த விடயத்தில் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தினால் தீர்கமான முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தலைமையில் அதிபர் உதவி அதிபர்கள் பிரதி அதிபர்கள் மற்றும் பகுதி தலைவர்களுடனான சந்திப்பு இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது. பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண்கின்றோம் பாடசாலையை நாளை தொடக்கம் சீராக நடாத்தும் படி பொலிசாரினால் கேட்கப்பட்டுள்ளது .
இந்த போராட்டம் மாணவர்களால் நடாத்தப் படுவதால் இதனை கட்டுப்படுத்த உரியவர்கள் இருவரையும் வலயக்கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர் . இந்த பகிஸ்கரிப்புக்களால் டிசம்பர் மாதம் ஓ .எல் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப் படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதே வேளை போலிஸ் நிலையத்துக்கு செல்வதற்கு முன்னதாக ஆசிரியர் கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது குறித்த ஆசிரியர் ஒருவரின் மைத்துனர் பாடசாலைக்குள் சென்று கூட்டம் நடை பெற்ற மண்டபத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து தாறுமாறாக தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளார் . இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதால் பாட சாலை நிருவாக கட்டமைப்பு சீர் குலையும் சந்தர்ப்பமே அதிகம் காணப்படுகின்றது.
Post a Comment