அக்குறணை, தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலய அதிபர் + ஆசிரியைகளுக்கு விருதுகள்
(JM.Hafeez)
கல்வித்துறையில் சகல விடயங்களிலும் அதிபர், ஆசிரியர்களது திறமைகள் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும் உயர்மட்ட விருதான 'தேசிய குரு பிரதீபா பிரபா' விருதை கண்டி மாவட்டத்தில் பின் தங்கிய ஒரு பாடசாலையின் மூவர் வென்றுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குற்பட்ட அக்குறணை, தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலத்தின் அதிபர் எஸ்.எச்.எம். ரியால்தீன் சக ஆசிரியைகளான திருமதி ஏ.ஆர்.எஸ். பௌஸியா, செல்வி ஏ.எஸ்.எப். ரிஸ்வியா ஆகியோரே இதனை வென்றவர்களாகும்.
கட்டுகாஸ்தோட்டை வலயத்தில் இவ்விருதை வென்ற ஒரே அதிபர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினர் கடந்த வருடமும் இவ்விருதை வென்றிருந்தனர். பாடசாலையின் பொது நிர்வாகம், ஒழுங்கமைப்பு கல்வி முன்னேற்றம் வெளிவேலைகள் போன்ற பல விடயங்கள் கவணத்திற் கொள்ளப்பட்டு வழங்கப் படும் இவ்விருது கல்வி அமைச்சு தேசிய ரீதியில் வழங்கும் உயர் விருதாகும்.
மகரகம தேசிய கல்வி நிருவகத்தில் இடம் பெற்ற வைபவம் ஒன்றின் போது பிரதமர் டி.எம்.ஜயரத்ன இவற்றைக் கையளித்தார்.
Post a Comment