Header Ads



சரத் பொன்சேகாவின் கட்சியிலிருந்து பல்டி..!

(Adt) கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டம் குண்டசாலை தொகுதியில் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பிரச்சினையில் சிக்கிய ஹேரத் பண்டார இன்று (22) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். 

இன்று காலை சிறிகொத்தவிற்கு விஜயம் செய்த அவர் கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். 

மத்திய மாகாண சபைத் தேர்தலில் தான் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதும் விருப்பு வாக்குப் பட்டியலில் 5ம் இடத்திற்குத் தள்ளப்பட்டதாக தெரிவித்து ஜனநாயகக் கட்சி தலைமையகத்திற்கு முன்னால் கடந்த 24ம் திகதி ஹேரத் பண்டார எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

தனது பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிடமும் பிரதி செயலாளரிடமும் கூறிய போதும் அவர்கள் அதனை கணக்கிலெடுக்கவில்லை என ஹேரத் பண்டார தெரிவித்துள்ளார். 

ஹேரத் பண்டார ஜனநாயக் கட்சியின் உறுப்பினர் மற்றும் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.