பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார், பதில் அதிபர் ஹம்ஸா ஆகியோரின் விளக்கம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்ற கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ. கபூர் ஆகியோர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் மற்றும் கல்லூரியின் பதில் அதிபர் எம். எஸ். எம் ஹம்ஸா ஆகியோர் ஊடகவியலாளர்களுக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் தருகையில் தெரிவித்ததாவது:-
பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்ததாவது:-
இக் கலூரிக்கு மேற்பார்வைக்காக நான் காலை 8.45 மணிக்கு வந்திருந்தேன். வகுப்புக்களைப் பார்வையிட்ட பின்னர் தனது அவதானிப்புக்களை கல்லூரி அதிபருடன் பேசிக் கொண்டிருக்கும் போது பிரதி அதிபர் கபூர் என்பவர் அதிபர் அலுவலகத்துக்குள் ஆக்ரோசமாக வந்து ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி அவர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் போகின்றார். அவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயமா என்று கூறிவிட்டு பலவிதமான வேண்டத் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். அந்த நேரம் அதிபர் அவசரப் படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னார்.
அதிபரின் வேண்டுகோளை மதிக்காமல் என்னை வம்புக்கு இழுப்பது போல் போவதும் வருவதுமாக இருந்தார். பிரச்சினைகளை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே இருந்தார். நீ யார் இங்கு வந்தது கேட்டுக் கொண்டா இங்கு வந்தீர் என்று கூறி அசிங்கமான வார்த்தைகளையும் பாவிக்கத் தொடங்கினார்.
அந்த நேரம் நான் சொன்னேன் நீ யார் என்று என்னிடம் கேட்பதற்கு முன் இதனை என்னிடம் கேட்பதற்கு நீர் யார் என்று அவரிடம் நான் கேட்டேன். நான் ஒரு அதிகாரி கல்லூரிக்கு வந்திருக்கும் போது என்னோடு நீர் மரியாதையாகப் பழக வேண்டும். இதை விடுத்து இக்கேள்வியைக் கேட்பதற்கு நீர் யார் என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.
அந்த நேரம் வாய்த் தர்க்கத்துடன் என்னை நோக்கி தாக்க வந்தார். தற்பாதுகாப்புக்காக என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில நடவடிக்கைகளை நானும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு பொலிஸார் வந்தனர் பதிவுகளை மேற்கொண்டனர்.
இக் கல்லூரியைப் பொறுத்த மட்டில் இக்கல்லூரியின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக மிகவும் மோசமான நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது. கலாசாரம் இங்கு படு மோசமாக உள்ளது. ஒழுக்கத்தைக் காண முடியவில்லை. பண்பாடு இல்லை. அதிபர் இரண்டு மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். ஒழுங்கான நிர்வாகம் இல்லை. கல்லூரிக்கு இருக்கும் அதிபர் ஆதம்பாவா என்பவர் தற்காலிகமான அதிபர். அவருக்கு நிதி நடவடிக்கைகளைப் பற்றி தெரியாது.
அண்மையில் நிதி மோசடி ஒன்று இங்கு நடைபெற்று அது சம்மந்தமாக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நிதி மோசடியில் இக் கல்லூரி ஆசிரியர்களின் பெயரில் காசோலைகள் வழங்கப்பட்டிருக்கிறன. அது சம்மந்தமாகவும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் இக் கல்வி வலயத்தில் நான் பொறுப்பாக இருக்கின்றேன். இக் கல்லூரியும் ஆயிரம் பாடசாலத் திட்டத்தில் அடங்கும் ஒரு பாடசாலையாகும்.
கல்முனைக் கல்வி வலயத்திற்குள் ஏழு பாடசாலைகள் இத் திட்டத்தில் அடங்குகின்றது. இந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நான் வலய இணைப்பாளர். அதன் நிமிர்த்தம் நான் இப் பாடசாலைகளுக்கு அடிக்கடி தரிசிக்க வேண்டும். இங்குள்ள நடவடிக்கைகளை அவதானிக்க வேண்டும்.
இவைகளைவிட எல்லாவற்றிக்கும் மேலாக நான் இப் பாடசாலையின் ஒரு பழைய மாணவன். அது மாத்திரமல்ல இப் பாடசாலையின் பழைய ஆசிரியரும் கூட. எனது தந்தை இப் பாடசாலையில் 20 வருட காலம் ஆசிரியராகக் கற்பித்திருக்கிறார். எனது சகோதரர்கள் இங்குதான் கற்பிக்கிறார்கள்.எனது பிள்ளைகள் படித்த பள்ளிக் கூடம். இக் கல்லூரி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவதில் நானும் ஒரு ஆள். அலுவலகத்தில் இருக்கும் ஏனைய அதிகாரிகளை விட அதிக பங்களிப்பை இக் கல்லூரிக்கு நான் செய்ய வேண்டும்.
ஆனால் கடந்த பத்து வருட காலமாக இக் கல்லூரியின் நடவடிக்கைகள் படு மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. கல்லூரி வளவுக்குள் பொது வடிகாண் கட்டப்பட்டுள்ளது. அதனால் இங்கு டெங்கு நுளம்பின் அபாயம் உள்ளது. பாடசாலக்குள் அநாவசியமாக கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இருக்கின்றது. இது முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. இப்படியான நடவடிக்கைகள் இக் கல்லூரியில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.
கடந்த 22 ஆம் திகதி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து இக் கல்லூரிக்கு ஏறக்குறைய 30 பேருக்கும் மேற்பட்ட ஒரு குழு வந்தது. அவர்கள் இங்கு ஒவ்வொரு பாடமாக அலசி ஆராய்ந்தார்கள். அவர்களின் முடிவுகளைப் பார்த்தால் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் அதள பாதாளத்தில் உள்ளது. சாதாரணமாக இங்குள்ள மல்-ஹறுஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தைப் பார்க்கிலும் மிக மோசமான நிலையில் இருக்கின்றது. இதனை அவர்கள் பகிரங்கமாக விமர்சிக்கிறார்கள்.
ஒரு முறை இக் கல்லூரியின் பரிசிலனைக்கு ஒரு அதிகாரி இங்கு வந்த போது நீ யார் வெளியே போ என விரட்டியிருக்கிறார்கள். அப்படியானால் இது ஒரு காட்டுப் பள்ளிக்கூடமா? இங்குள்ள மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லை அவர்களுக்கு தாடி மீசை. காலில் செருப்பு. தேசிய பாடசாலை எனின் இதற்கு என்று ஒரு தனித்துவம் கலச்சாரம் இருக்கின்றது. அது பேணப்படல் வேண்டும்.
எனது மோட்டார் சைக்கிளை மாணவர்களைக் கொண்டு உடைத்திருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஒரு ஆசிரியர் இருந்திருக்கிறார். அந்த ஆசிரியர்தான் இப்பாடசாலையை நாசமாக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் சில நன்மைகளுக்காக சண்டித்தணமான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
இக் கல்லூரிக்கு அதிகாரிகள் எவரும் வர முடியாது என்றால் இக் கல்லூரியை யார் பார்ப்பது. சமூகத்தின் சரியான பங்களிப்பு இல்லை. பழைய மாணவர்களின் பங்களிப்பு இல்லை. இக்கல்லூரியில் இருக்கின்ற ஆசிரியர்கள் ஒழுங்காக தமது கடமைகளைச் செய்கின்றார்களில்லை. கடந்த ஐந்து வருடங்களாக இக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நேரசூசி இல்லை. திணைக்களம் சம்பளம் கொடுக்கின்றது. ஒரு ஆசிரியருக்கு இரண்டு பாடம் மூன்று பாடம் சிலருக்கு பாடமே இல்லை. இதையெல்லாம் இக்கல்லூரியில் பார்ப்பது யார்? இவ்வாறு பிரதிக் கல்விப்பணிப்பாளர் முக்தார் தனது விளக்கத்தின் போது தெரிவித்தார்.
கல்லூரியின் பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா இக் கைகலப்பு தொடர்பாக விளக்கம் தருகையில்:-
கல்முனைக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் அவர்களோடு கல்லூரி விடயம் சம்மந்தமாகப் நான் பேசிக்கொண்டிருக்கும் போது எங்களது பிரதி அதிபர் கபூர் ஆசிரியர் அவ்விடத்திற்கு வந்து எங்கள் கல்லூரியின் ஆறாம் ஆண்டு பகுதித் தலைவர் கல்லூரியை விட்டு வெளியே போகின்றார் அதனைக் கவனிக்கவில்லை என்று இரண்டு மூன்று தடவைகள் சொன்னார். அதனை நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன் தற்போது வாயைச் சற்று பொத்திக் கொள்ளுங்கள் என்று அவருக்கு நான் சொன்னேன். பிறகு அவர் பிரதிக் கல்விப் பணிப்பாளரோடு வாதிட்டார். வாய்த் தர்க்கம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. விடுங்கள் விடுங்கள் என்று நான் எவ்வளவு கேட்டும் அவர் விடவில்லை. பொறுமையைக் கைப்பிடிக்காததால் வந்த விளைவுதான் இது என்றார்.
சகோதரர் முக்தார் அவர்களே, நீங்கள் கூறிய அத்தனை குற்றச் சாட்டுக்களும் நீங்களும் உங்களுது சகோதரர்களும் உங்களுது வாப்பாவும் ஆசிரியராகவும் மாணவர்களாகவும் இந்த பாடசாலையில் இருக்கும் போது செய்த குற்றங்களாகும். அடவடித்தனங்கலாகும்.
ReplyDelete30 வருட காலமாக உங்கள் கும்பத்தால் இந்த கல்லூரியின் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பெரிய தொல்லையப்பா தயவு செய்து உதவி செய்ய விட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.
கல்வியதிகாரி பழைய மாணவனாக இருந்தும் உலகுக்கு உண்மையான நிலைமையை கூறியுள்ளார், ஒருகாலத்தில் கல்முனை சாஹிரா கல்லூரி என்றால் பெரும் புகழ், தற்போதைய நிலைமை கடும் மோசமாக உள்ளது. கல்முனை மட்டுமல்ல பொதுவாக கிழக்கு முஸ்லிம் பாடசாலைகள் எல்லா வற்றிலும் ஒரே நிலைமை. ஆசியர்கள் மாணவர்களை தங்களின் நலனுக்காகபயன்படுத்துவது அதிகம், அநேகமான மாணவர்கள் போதை வஸ்து பாவிக்கிறார்கள். கஞ்சா. சாராயம், போன்ற கெட்ட பழக்கங்கள் அதிகமாக காணக்கூடியதாக உளளது. சொந்த ஊரகினும் முத்தார் மிகவும் தெளிவாக கோடிட்டு காட்டிஉள்ள விடயங்களில் உடனடிக்கவம் எடுக்குமாறு கல்முனை சாஹிராகல்லூரி பழைய மாணவர்கள் பெற்றார்கள், நலன்விரும்பிகள், மற்றும் பொதுமக்களை கேட்டுகொள்கிறோம்.
ReplyDeletejaffnamuslim ஆசிரியருக்கு,
ReplyDeleteஇங்கு கருத்து சொல்லி இருக்கும் பிரதி கல்வி பணிப்பாளர்
எ எல் எம் முக்தார் , பிரதி அதிபர் எ எல் எம் ஹம்சா இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் . உண்மையை திரிக்க முற்படுகிறார்கள் .
தயவு செய்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் தரப்பு நியாயங்களை அம்பலப்படுத்தவும் .
பிரதி கல்வி பணிப்பாளர் எ எல் எம் முக்தார் சம்மாந்துறை கல்வி வலயத்தில் செய்த ஊழல்கள் ஊர் அறிந்தவை.