Header Ads



முஸ்லிம்களின் பிரிவுகளுக்கு மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதில் வெற்றி - இஸ்ரேல் ஒப்புதல்

(inne) எகிப்து உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் தங்கள் நாட்டின் உளவாளிகள் ஆழமாக வேரூன்றி செயல்படுவதாக இஸ்ரேல் ராணுவ உளவு பிரிவின் முன்னாள் தலைவர் ஜெனரல் அமோஸ் யாட்லின் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள சேனல் 7 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த யாட்லின் இஸ்ரேல் பல ஆண்டுகளுக்கு முன்னே தன் உளவாளிகளை பயிற்றுவித்து பல்வேறு நாடுகளில் உள்நுழைய செய்து இன்று ஆழமாக வேரூன்றி உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக எகிப்து உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் இஸ்ரேலின் உளவு பிரிவு ஆழமாக வேரூன்றி உள்ளதாக குறிப்பிட்டார்.

1979 முதல் எகிப்தில் இஸ்ரேலின் உளவு பிரிவு செயல்படுகிறது என்று தெரிவித்த யாட்லின் இஸ்ரேலின் உளவு பிரிவினர் எகிப்தின் அரசு நிறுவனங்களுடன் வலுவான தொடர்பை வைத்துள்ளனர் என்றும் கூறினார். மேலும் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமூக மற்றும் முஸ்லீம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

துனிசியா, மொராகோ, ஈராக், சூடான், ஏமன், லெபனான், ஈரான், லிபியா, பாலஸ்தீன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்ரேல் உளவாளிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருவதாகவும் யாட்லின் பெருமிதப்பட்டார். இஸ்ரேல் ராணுவ உளவு பிரிவின் முன்னாள் தலைவரான ஜெனரல் அமோஸ் யாட்லின் தற்போது டெல் அவிவ் பல்கலைகழகத்தில் தேசிய பாதுகாப்பு கல்வி துறை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உண்மைக்கான (உண்மை ) முஸ்லிமின் வெற்றி இதுதான். சிலபேர். . புரியாமல் கெக்கெரிக்கிறார்கள் இது அவர்களின் சூல்ச்சியல்ல ,அல்லாஹ்வின் சூழ்ச்சியாகும். உண்மை இஸ்லாத்தின் வளர்ச்சியாகும்

    ReplyDelete

Powered by Blogger.