அட்டாளைச்சேனை மீனவர்களின் கவலை (படங்கள்)
(ஏ.எல்.ஜனூவர்)
கடந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை மீனவர்களின் நன்மை கருதி அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் சுமார் 06 வருடங்களுக்கு முன் அட்டாளைச்சேனை கப்பலடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையம் இது வரைக்கும் பாவனைக்கு வழங்கப்படவில்லை என மீனவர்கள் கவலையடைகின்றனர்.
இந் அரச சார்பற்ற நிறுவனத்தினால் அப்பிரதேச மீனவர்களுக்கு மீனவர் சந்தை, மீனவர் விடுதி என்பனவும் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 27000 லீற்றர் கொள்வனவு கொண்ட இம் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையம் பாவனைக்கு வழங்கப்படாமல் இருப்பதனால் மீனவர்கள் பெரிதும் அசௌகரியத்துக்குற்படுகின்றனர். இதனால் தினமும் சுமார் 4ஃ5 கிலோமீற்றர் சென்று தங்களது வள்ளங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
மீனவர்களின் நன்மை கருதி இது தொடர்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment