இலங்கை உதைப்பந்தாட்ட அணியில் கிண்ணியா உபைதுள்ளா இஹாம்
(ரைஸ்)
கிண்ணியா மத்திய கல்லூரி இல் கல்வி பயிலும் உபைதுள்ளாஹ் இஹாம் என்ற மாணவன் தனது விளையாட்டு திறைமையால் இலங்கை உதைபந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட போட்டியில் பங்குகொள்ள பயணமாகவுள்ள நிலையில் அவருக்கான வாழ்த்துக்களை தெரிவிக்கவும், பயணத்திற்கான பண உதவிகளை வழங்கவுமென ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று இரவு பாடசாலை அதிபர் ரூமி தலைமையில் பாடசாலை அப்துல் மஜீது மண்டபத்தில் ஆரம்பமானது.
நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேச சபை பிரதி தவிசாளர் நிஹார் ஆகியோர் அதிதிகளாக வருகை தந்ததோடு இஹாமுக்கான அன்பளிப்பு உதவித் தொகையினையும் வழங்கி வைத்தனர். தாய்லாந்து பயணமாகவுள்ள சாதனை வீரன் இஹாமுக்கு கிண்ணியா மக்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர். நிகழ்வுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு கழக நிருவாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் தன்னை இந்தளவுக்கு பயிற்றுவித்து சாதனை பெறவைத்த ஆசிரியர்களுக்கும்;, தன் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதோடு பாடசாலை விளையாட்டு கழகத்திற்காக 20 பந்துகளையும் இஹாம் அன்பளிப்புச் செய்தார்.
Post a Comment