Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு, அரசுக்குள் விரோதத்தை தோற்றுவிக்குமா?

(தந்திமகன்) 

இலங்கையின் அரசியலமைப்பில் கொண்டுவந்த பதின் மூன்றாவது திருத்தத்தின் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு நாட்டில் புரையோடிப்போனதாகக் கருதப்பட்ட இனரீதியான குறிப்பாக தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுவதற்கான முயற்சிகளின் ஓர் அங்கமாக அன்று மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. அதன் பிரகாரம் மாகாணதெரிவு முறையில் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்து மத்திய அரசும், மாகாண அரசும், கிராமட்டத்திலான உள்ளுராட்சி நிறுவனங்களும் மக்களின் காலடியில் சேவைகளையை வழங்கி வருகின்றனர். இதற்குள் ஆயிரம் பிரச்சினைகள். இதனையும் தாண்டி பதினெட்டாவது திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத்தேர்தல் முடிவுகள் குறிப்பாக வடபுலத்திற்கான தேர்தலில் தமிழர் கூட்டணியின் வெற்றியுடன் பதின்மூன்றாவது சீர்திருத்தம் பற்றிய பேச்சு வலுப்பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்காக கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் சிலவற்றை மத்தியரசின் கைவசம் வைத்திருப்பதற்கான விபரத்தை அண்மையில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கள் ஒருபுறமிருக்க உயர்நீதிமன்றத்தின் நீதியரசராக வீற்றிருந்து, ஓய்வுபெற்றிருந்த நிலையில் வடமாகாணத்திற்கான தேர்தலில் அமோக வெற்றிபெற்று புதிய முதலமைச்சராகியுள்ள திருவாளர் வீ. விக்னேஸ்வரனுக்கு தெரியாத அரசியலமைப்பா? என்பது அரசுக்குத் தெரிந்திருந்தும் காணியதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாமை குறித்து எழுந்துள்ள ஐயப்பாடுகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணசபையிலும் பாரிய முன்னெடுப்பு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு பதின்மூன்றாவது அரசியலமைப்பினை உறுதிப்படுத்துமாறு அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளமை இலங்கையின் அரசியலில் எதிர்வரும் நாட்களில் பாரிய மாற்றத்தை நோக்கிய நகர்வுகளுக்கான அத்திவாரமாக இவை அமையும் என அரசியல் அவதானிகளால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஆளும் அரசின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபைக்கான குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணை ஒன்று பலத்த அமளிதுமளியை ஏற்படுத்தி இறுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை சபையில் சமர்பிக்கப்பட்ட போது ஏற்பட்ட கடுமையான வாதப்பிரதிவாதங்களின் பின் சபை நடவடிக்கை தொடர்ந்தது. இவ்விவாதம் நிறைவுக்கு வந்ததுடன் பிரேரணைமீது வாக்கெடுப்புக்கு விட்டபோது. பிரேரணைக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தது. முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களுடன் மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, ஆளும் தரப்பு போனஸ் உறுப்பினர் நவரட்ணராஜா ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். ஆளும் தரப்பு உறுப்பினர் பிரியந்த பத்திரன (திருகோணமலை) எதிர்த்து வாக்களித்த ஒரே ஒரு உறுப்பினராவார்.  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய அமர்வில் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. அப்படியாயின் இவர்களது நிலைப்பாடு என்ன என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஆளும் அரசில் பங்குகொண்டுள்ள இந்த முக்கிய மூன்று முஸ்லீம் கட்சிகளுக்குள்ளும் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் பின்னரான செயற்பாடுகள் அரசுக்குள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்மீதான கசப்புணர்வை மேலோங்கச் செய்துள்ளமை இந்த பிரேரணை கொண்டுவரக் காரணமான நிலைமைகளுள் இதுவும் ஒன்று என்கின்றனர் அரசியல் அவதானிகள்.   

மேலும், கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் '13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கை பேரினவாத அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை முறியடிக்க வேண்டும்' என்றும், 'சிறுபான்மையினரின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்' என்றும் 'இதனை ஒழிப்பதற்கோ அல்லது 13 ஆவது திருத்த சட்டத்தில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களை குறைப்பதற்கோ கிழக்கு மாகாண சபை ஒருபோதும் இடமளிக்கக் கூடாது' என்றும் ஜெமீல் கேட்டுக் கொண்டார்.

இது ஒருபுறமிருக்க இலங்கையின் அரசியலமைப்பு பலகட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களுடன் உயிர்ப்பிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் (ஊழளெவவைரவழைn ழக வாந னுநஅழஉசயவiஉ ளுழஉயைடளைவ சுநிரடிடiஉ ழக ளுசi டுயமெய) என்பது 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் முதல் தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டம் இதுவாகும். இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.
இதன் வரலாற்றைப் பற்றிப்பார்ப்போமானால் 1977 ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, 1972 அரசமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 அக்டோபர் 4 இல் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (சனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 இல் அரசுத்தலைவரானார். 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. இதன் படி, ஐதேக ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்ற ஓரவை முறைமையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் பதவியையும் அங்கீகரித்தது. அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் பல்லுறுப்பினர் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 14வது திருத்தச் சட்டத்தில் 225 ஆக அதிகரித்தது.

இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம் இலங்கையை தற்போது ஆளுகின்ற அரசின் தலைவரான மகிந்த இராஜபக்ஸ தலமையிலான அரசினால் முன்மொழியப்பட்ட ஒரு அரசியல் சீர்திருத்தமாகும். இந்தச் சீர்திருத்தம் மூலம் அரச அதிபரின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் அரச அதிபர் தேர்தலில் இரண்டு முறை மட்டுமே ஒருவர் போட்டியிடாலாம் என்ற நிலை நீக்கப்பட்டு ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடும் அனுமதி வழங்கப்படுகிறது. இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்தச் திருத்தம் மூலம் அரச அதிபரின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. மேலும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் அரச சொத்துக்களை தேர்த்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உரிமையையும் தேர்தல் ஆணையாளர் இழக்கின்றார். தேர்தல் காலங்களில் தனியார் ஊடங்கள் செயற்படுவதற்கான விசேட கட்டுப்பாட்டு முறையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமைகளைக் கடந்துவந்துள்ள இலங்கையின் அரசியலமைப்பு திருத்தங்களின் பிரகாரம் மாகாணசபைகளில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டமூலத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் மேலே கூறப்பட்டுள்ள பதின்மூன்றுக்கான சட்ட மூலத்தை வலுப்படுத்துமளவுக் அரசைக்கோருகின்ற சட்டத்திற்கு அதிக மவுசு இருக்காது என்பதைத் தெரிந்தும் இது வெறும் கண்துடைப்பாகவும், மக்களின் வாக்குகளைப் பெற்று மாகாணசபையில் என்ன செய்கிறோம் என்பதைக் காண்பித்து அடுத்த தேர்தலில் வாக்குக்கேற்பதற்குரிய முன்நடவடிக்கையாக இது சிலரின் வற்புறுத்தல்களினால் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் மாகாண சபையின் அமைப்புக்கு இந்த விவாதமும், தீர்மானமும் எந்தவிதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மையாகும். அப்படியானால் ஏன் இந்த தீராதவிளையாட்டு என்பதையும் நாம் காணவேண்டும். இன்று அரசியலில் அங்கம் வகிக்கின்ற முஸ்லீம் கட்சிகளுக்குள் அதாஉல்லா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தான் அதிகளாவான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதனால்தான் என்னவோ ஆளும் கிழக்கு மாகாணசபையில் முக்கியபங்காற்றுகின்ற பங்காளிக் கட்சியான அமைச்சர் உதுமாலெவ்வை சார்ந்துள்ள கட்சியின் விசுவாத்தையும், அமைச்சுப்பொறுப்புக்கு பாதிப்பினையும் ஏற்படுத்தாத வகையில் அவர்கள் பிரசன்னமாக இருக்காதமை அவர்களின் பார்வையில் சரியே.
மேலும், கடந்த 30ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாமலே செல்லுமா? என்கிறளவுக்கு பேசப்பட்ட இலங்கையின் யுத்த வரலாறுகளைத்; துண்டாக்கிய இன்றைய அரசின் அதிகாரத்தை பரவலாக்கும் முயற்சியும், இனிமேல் இரத்தக்கறை படியாதவாறு இலங்கையின் அரசியல் அபிலாhஷைகளை இங்கு வாழ்கின்ற மூவின மக்களும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கான வழிவகைகயைக் காணவிளைய ஏற்படுத்தப்பட்ட கற்றபாடங்களும், நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இத்தகைய தீர்வுகளுக்கு தீர்வாக அமையும் வண்ணம் ஆணைக்குழு மேற்கொண்டிருந்த முடிவுகளின்படி மேற்கொள்ள ஆவணசெய்யுமாறு அரசைக் கோரி நின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கமும் ஆணைக்குழுவினது தீர்வாக அத்தியாயம் 6இல் காணிப்பிரச்சினைகள் மீதானஅவதானிப்புக்கள் தொடர்பாக சிறப்பான முடிவொன்றினை முன்வைத்துள்ளமை சிறப்பானதாகும். அதாவது, இலங்கையின் எந்தவொரு பிரஜையும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய காணிகளை உரித்தாக்கிக் கொள்ளவும், தாம் தனது விருப்பதற்குரிய எந்தவொரு பகுதியிலும் அழுத்தமின்றி வசிப்பதற்கும் உள்ள உரிமையை நீக்க முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் மக்கள் பரம்பல் மாதிரியை இயற்கைக்கு முரணான வகையில் மாற்றுவது அரசாங்கத்தின் காணிக்கொள்கையாக அமையக் கூடாது. இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்புடைய வகையிலேயே காணிப்பகிர்வு இடம்பெற வேண்டும்' எனக் கூறப்படுகின்றது. இது எவ்வளவுதூரம் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியும் உள்ளது.

அதேவேளை ஸ்ரீலங்கா மு.கட்சியினரின் அண்மைக்கால செயற்பாடுள் ஆளும் அரசிலிருந்து சற்று தூரமாகி விலகிச் செல்வதுபோல அவர்களின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் காணப்படுவதாகக் கூறுவோரும் உண்டு. அந்தவகையில் வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் வட பிராந்தியத்துக்கு உரித்தான ஆட்சி அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிடின் சர்வதேச ரீதியாக இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எம்ரி. ஹஸன் அலி அண்மையில் அரசை எதிர்த்து எச்சரிக்கைக் கருத்துக்களை nளியிட்டிந்தார் அது மட்டுமன்றி, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்விலும் கடுமையான விமர்சனங்களையும் பிரேணைகளையும் இலங்கை அரசு எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.  

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் ஆயுத அடக்கு முறைக்குள் வாழ்ந்து அவர்களின் விருப்பம்போல் செயற்பட்டார்கள் எனக் கூறுவோர் இன்றைய யாதார்த்த நிலைமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று புலிகள் இல்லை. அப்படி இருந்தும் அவர்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூயதான ஒரு கட்டமைப்பினையே இன்றும் வேண்டி நிற்கின்றனர். அதிகாரம் தேவை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பது தெளிவான ஆணையை தேர்தல் மூலம் வெளிக்காட்டியுள்ளனர். எனவே, இலங்கை அரசு நிலைமையை புரிந்து சட்டரீதியான அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்கி புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். இதனைவிட இனி எந்தவழியும் இல்லையென்றால் ஸ்ரீல.முகவினரையும், தமிழர்களையும் இனிமேலும் அசாங்கம் ஏமாற்ற முடியாது' என ஹஸன் அலி தெரிவித்திருக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் கிழக்கிலும் ஒரு முழுமையான ஆளுகைக்குட்பட்ட அதிகாரம் தேவை என்பதை கூறாமலே கூறுகின்றார். இனி நடப்பவைகளை பொறுத்திருந்து அவதானிப்போம்.

2 comments:

  1. இழிப்புக்கும் சிரிப்புக்கும் வித்தியாசம் விளங்குதில்லே?

    ReplyDelete
  2. sl m c arasukkul iruntu kondu 13 kku aataravaaha arasaangattai atirttullatu .....aanaan risat b. atavullaavin m s uruppinarkal .tookkattil olintu viddaarkal..s l m c kku veenaaha kataippawerkal iniyavatu purintu kolla veandum .. s l m c balamaana kadji eanru

    ReplyDelete

Powered by Blogger.