Header Ads



மன்னார் பெரியமடு கிராமம் - விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட வரலாறு

(எம். ஹனிபா ஹஸின்)

மன்னார் மாவட்டத்தில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பெரியமடு குடியேற்றத்திட்டம் அமைந்துள்ளது.  இக்குடியிருப்பு விடத்தல் தீவிலிருந்து தென்கிழக்காக 8 மைல் தூரத்திலும் பாலம்பிட்டியிலிருந்து வடமேற்காக 7 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இக்குடியேற்றத் திட்டத்தின் மொத்தப்பரப்பளவு 850 ஏக்கராகும். இதன் மொத்த சனத்தொகை 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பின்படி 1127 பேர் ஆகும். இக்குடியேற்ற திட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் (87மூ)  இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்னையினராகவும் காணப்;பட்;டனர். 1990 தரவுகளின் படி காணப்பட்ட 610 குடும்பங்களில் 600 குடும்பங்கள்  முஸ்லிம் குடும்பங்களாக காணப்பட்டன.

பெரியமடு கிராமத்தின் தோற்றம்
விடத்தல் தீவு மன்னார் மாவட்டத்தில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள ஒரு தீபகற்ப அமைப்பைக் கொண்ட கிராமமாகும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு இக்கிராமத்தின் இருப்பிட நிலவசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டனவாகக் காணப்பட்டன.
இந்நிலையில் 1956ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடத்தல் தீவுக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதம அமைச்சர் திரு. டி.எஸ். சேனநாயக்க அவர்களிடம் விடத்தல் தீவு பொதுமக்கள்  பெரியமடுவில் ஒரு குடியேற்றத்திட்டத்தை அமைத்துத்தரும்படி மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர். இவ்வேண்டுகளுக்கு  இணக்கம் தெரிவித்த  அமைச்சர் அவர்கள் ஒரு குடியேற்றத்திட்டத்தை  ஆரம்பிக்கும்படி விவசாய அமைச்சருக்கு அறிவித்தார். அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த திரு.டட்லி சேனநாயக்க திட்டம் ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதன் பிரதிபலனே பெரியமடுக் குடியேற்றத்திட்டாகும். பெரியமடுக் குடியேற்றத்திட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

                              (1988-1996)
இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மை பெற்ற காலப்பகுதியில் இத்தசாப்தம் ஆரம்பமாகின்றது. எனவே, இக்காலப்பகுதியானது பெருமளவுக்கு பல்வேறு வகையிலும் பிரச்சினைகளால் சூழப்பட்ட ஒரு காலப்பகுதியாக விளங்கியது. இதனால் இக்காலப்பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் இடம்பபெறாததோடு வடபுல முஸ்லிம்கள் தமது வாழ்வகங்களை   விட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

1988ம் ஆண்டில் பெரியமடு காணிவழங்கல் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது, பெரியமடு விடத்தில் தீவு வீதியில் ஈச்சளவக்கையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரையில் பெரியமடுவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காணிவழங்கல் திட்டங்கள் எதுவும் வரட்சி, போர்ச்சூழல் முதலிய காரணங்களர் உரிய பலனை தராத நிலையில் ஈச்சளவக்கை கரிண வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  இத்திட்டத்தில் திருமண மான காணியற்றவர்களுக்கும், இளைஞர்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டன. தலா ஒரு ஏக்கர் வீதம் 100 பேருக்கு ஈச்சளவக்கையில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. இத்திட்டம் பெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தவென்றாகும். மானிய அடிப்படையில் வீடுகள் அமைப்பதற்கான கடன்வசதிகளும் வழங்கப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்ட வேளையிலே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேசம காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்டிருந்த நிகழ்வுகளே இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தானமையும் அதன் பின் ஏற்பட்ட வடக்கு கிழக்கு மாகண சபை அமைக்கப்பட்டதையும் இந்திய அமைதிப்படைகளின் வரவுமாகும். இந்நிகழ்வுகளும் எமது மக்களின் மீது பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தியவையாகும். இந்திய அமைதிப்படையின் பிரசமன்னம் தமிழ் ஆயுதக் குழுக்களால் எமது மக்கள் அடைந்த துன்பங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. விடத்தல் தீவிலும் பாலம்பிட்டி, மடுக்கோவில் ஆகிய இடங்களில் இந்திய அமைதிப்படையின் முகாம்கள் அமைந்திருந்ததமையால் அடிக்கடி பெரியமடுவுக்கு இவர்கள் வந்து போயினர். அதனால் அவர்கள் வயது  வேறுபாடுடின்றி இளைஞர்கள், முதியோர்கள், பிடிக்கப்பட்டு இம்சைப்படுத்தப்பட்டனர். கைது செய்து முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மிளகாய்  வியாபாரத்துக்கென சென்று வந்த வேளை ஜனாப் எம். ஜெமில் என்பவர் சுடப்பட்டு பாரிய காயத்துக்குள்ளனார். இவ்வேளையில் விடத்தல்தீவு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பாலம்பிட்டி தமிழர்கள் பலமுறை இடம்பெயர்ந் பெரியமடுவில் தஞ்சம் அடைந்த போது எமது மக்கள் அவர்களுக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்து ஆதரித்தனர்.

இந்திய அமைதிப்படை 1989ல் இலங்கையிலிருந்து வெளியேறியபோது எமது மக்களும் சிறது ஆறுதல் அடைந்தனர். ஆயினம் எம்மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தது. 1990ம் ஆண்டில் 20ம் கட்ட ஈழப்போர்  ஆரம்பமானதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியது. போக்குவரத்துக்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டன. மன்னாருக்கு செல்வதாயின் கடல் மார்க்மாகவே செல்லவேண்டியிருந்தது. வவுனியாவிற்கும் இலங்கையின் தென்பகுதிக்கும் பல்வேறு பொருட்களுக்கும் தடைவிதிக்கப்பட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் வடபகுதியிலிருந்து பெருமளவு தமிழர்கள் இடம் பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றனர். இவ்வாறு தமிழர்கள் சென்ற போது பெரியமடுவில் வசித்த மலையக தமிழர்களில் பெரும்பாலானோரும் தென்னிந்தியாவுக்குச் சென்றனர். அவ்வாறு சென்ற போது இவர்கள் தமது உடமைகளை விற்றுவிட்டுச் சென்றனர். அவ்வுடமைகளை உரிய பெறுமதியைக் கொடுத்து இங்கிருந்த முஸ்லிம்களே வாங்கி இவர்களுக்கு உதவி செய்தனர். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு தமிழர்கள் இந்தியா சென்றபோது பெரியமடுவை இடைத்தங்கல் நிலையமாக கொண்டனர். இவ்வாறு இவர்கள் சென்ற பெரியமடு மஹாவித்தியாலயத்திலே பலநாட்கள் வரையில் தங்கிச் சென்றனர். இதே நேரம் மன்னார் தீவிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் முஸ்லிம்களும் இலங்கையின் தென்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்ற போதும் பெரியமடுவையே தங்கிச் செல்லும் யனெ நிலையமாகக் கொண்டனர். ஆயினும், இடம் பெயர்வதைப்பற்றி  பெரியமடு முஸ்லிம்கள் சிறிதும் சிந்திக்கவில்லை. ஆயினும், போரில் ஈடுபடுவதற்கென தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லிம் இளைஞர்களையும் தமது அமைப்பில் வலுக்கட்டாயமாக சேர்க்கின்றனர் என்ற வதந்தி முஸ்லிம்களின் பிரதேசங்களில் பரவியதால் பெரியமடுவிலும் பெற்றோர்கள் தமது ஆண்பிள்ளைகளை இலங்கையின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வகையில் வெளியேறிய இளைஞர்கள் கிராமிய அபிவிருத்தி நிறுவனம் பொறுப்பேற்று கொட்டரமுல்லை நளீம் ஹாஜியார் புரத்தில் முகாம் ஒன்றை நிறுவி பராமரித்து சுமார் 100 வரையான இளைஞர்கள் இவ்விளைஞர் முகாமில் பராமரிக்கப்பட்டனர்.

இதோ காலப்பகுதயில் அதாவது 1990 ஜுன் மாதம் இறுதி வரையில் மற்றொரு துன்பியல் நிகழ்வும் பெரியமடுவுக்கு ஏற்பட்டது. கிராம அபிவிருத்தி நிறுவனம் பெரியமடுமற்றும் கோவிற்குளம், அடம்பன், விடத்தல் தீவு ஆகிய இடங்களில் இடம்பெயாந்த யாழ்ப்பான மக்களுக்கு வழங்கிய உலர் உணவுப் பொருட்களை ஏற்றி வந்த லொறியில் சென்ற கிராமிய அபிவிருத்தி நிறுவன உறுப்பினர்களான பெரியமடுவைச் சேர்ந்த ஜனாப்களான ஆ.யு.ஊ.ஆ. நயீம், ஏ.ஆ. ஜகுபர் ஆகியோரும் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அனுராதபுர மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜுலை மாதம் முதல் வாரத்தில் கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக அனுராதபுரம் சென்ற ஜனாப் ஆ.யு.ஊ.ஆ. ஜுவைஸ் எனும் இளைஞர் கலாஓயா இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.

இவ்வாறு நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் பெரியமடுவில் நிலைத்த வேளையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளால் 1990 ஒக்டோபர் மாதம்  இறுதி வாரத்தில் வாழ்வகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். வரலாற்றாசிரியர்களும் அரசியல் ஆய்வாளர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றுத் தவறு என்றும் இன அழிப்புக்கு ஒப்பானது என்றும் வடபுல முஸ்லிம்களை ஆயுது முனையில் வெளியேற்றிய இந்நிகழ்வு குறிப்பிடப்படுகின்றது. 1990.10.23ம் திகதியிலிருந்து 1990.10.30ம் திகதி வரை வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் நடைபெற்றது. இதில் பெரியமடு முஸ்லிம்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து வெறுங்கையோடு உடுத்த உடையோடு 1990.10.26,27,28 ஆகிய மூன்று தினங்களி; வெளியேற்றப்பட்டனர்.

எமது மக்களின் வாழ்வில் என்றும் மறக்கு முடியாத, அழிக்க முடியாத வடுவாக நிலைத்த இந்நிகழ்வு பெரியமடு வரலாற்றில் விழுந்த மாபெரும் கறுப்புப் புள்ளியாகும். இந்நிகழ்வின் மூலம் எமது மக்கள் தேங்காயின் துண்டுகளாகஇலங்கையின் நாலாதிசைகளிலும் சிதறுண்டு போயினர். பல்வேறு கஸ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் இவ்வெளியேற்றம் நிகழ்ந்தது. சொல்லிலே வடி   க்க முடியாத துன்பியல் நிகழ்வான இவ்வெளியேற்றத்தின் போது இடைவழியிலே சில பிரசவங்கள் கூட எதிர்பாராத முறையில் நிகழ்ந்தன. ஜனாப். ஆ.ஊ. காமித் எனும் இளைஞன் (வாய்பேசமுடியாதவர்) காலமான போது மிகுந்த கஸ்டங்களோடு எடுத்து வரப்பட்டு இக்கிரிகொல்லாவையில் அடக்கம் செய்யப்பட்டார். தாங்கொண்ணாத் துன்பங்கைள அனுபவித்தவராக வெளியேளிய இவர்கள் வவுனியா, வந்து அங்கிருந்து இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர்.பெரியமடு மக்களின் பெரும்பான்iயானவர்கள் புத்தளம் மாவட்டத்தி;லும் ஏனையோர் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் முஸ்லிம் பகுதிகளிலும் அடைக்கலமாகி அகதிகளாயினர்.

1990 ஒக்டோபர் இறுதி வாரத்தில் நிகழ்ந்த பலவந்த வெளியேற்றம் எம்மவர்களை மனத்தளவிலும் உடல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்;திய ஒரு நிகழ்வாகும். இக்காலப்பகுதியிருந்து எமது வரலாற்றிலே ஒரு நிலைகளை ஒரே நேரத்திலே காண முடியும். அவற்றுள் ஒன்று பெரியமடுப் பிரதேசத்தின் நிலை, மற்றையது வெளியேறிய பெரியமடு முஸ்லிம்களின் நிலை, நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக்காட்டிய பிரகாரம் பெரியமடுவில் வசித்த தமழர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த வேளை ஒரு சிவ தமிழ்க் குடும்பங்களே முஸ்லிம்களுடன் வசித்தனர். பெரியமடுவின் பெரும்பான்மையினரான (90மூக்கு மேல்) முஸ்லிம்கள் வாழ்வகத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது பெரியமடு ஒரு மயான நிலைக்கே மாறியது எனலாம். சுமார் 10ற்கும் குறைவான தமிழ்க் குடும்பங்களே அப்போது காணப்பட்டன. 600க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் பத்துக் குடும்பங்களால் வாழ்வது சாத்தியமா என்று ஆராயும் போது அவர்களும்(தமிழர்களும்) பெரியமடுவைக் கைவிட வேண்டிய நிலையே காணப்பட்டது, எனவே, பெரியமடு கைவிட வேண்டிய நிலையே காணப்பட்டது. எனவே, கைவிடப்பட்டு காடாகியது. 2002ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி சமாதான சூழ்நிலை ஏற்பட்டபோது பெரியமடுவை பார்க்கச் சென்ற வேளையிலே இதனை நிதரிசனமாக காணக் கூடியதாக இருந்தது. இடம் பெயர்ந்த சில குடும்பங்கள் மட்டும் ஊர்திரும்பி இருந்தன. பெரும்பாலான வீடுகள் இடித்து அழிக்கப்பட்டிருந்தன. ஊர் முழுவதும் காடு மண்டிக் காணப்பட்டது. வீதிகள் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு காடாகி காணப்பட்டது.

 பெரியமடு முஸ்லிம்களின் நிலையோ நான்காம் தசாப்;தத்தின் இறுதி வரை அகதி முகாம்களில் அல்லலுறுவதாக அமைந்திருந்தது. 1990 ஒக்டோபரில் பெரியமடுவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் இம்மக்கள் பல குழுக்களாக பிரிந்து பல இடங்களுக்கும் பிரிந்து சென்றனர். முன்னர் கூறிய படி புத்தளம் மாவட்டம் நாடிய பொரும்பான்மையோரில் அதிகமானோர் மதுரங்குளி பிரதேச விருதோடையில் அடைக்கலமாயினர். இது தவிர புத்தளம் நகர், புளிச்சாக்குளம், பனையடிச்சோலை, கனமூலை, பூலாச்சேனை, ஏத்தாளை, கரம்பை ஆகிய இடங்களிலும் கொட்டாரமுல்லையிலும் தஞ்சமடைந்தனர். குருநாகல் மாவட்டத்தின் கெகுனுகொல்ல, சியம்பலாகஸ்கொட்டுவ, பம்பண்ணை, மெல்சிரிபுர(மாய்வெல) ஆகியவிடங்களிலும் அனுராதபுர மாவட்டத்தில் பமுணுகமை, கலாவௌ(அழகப்பெருகம) மாத்தளை மாவட்டத்தில் நிக்க வட்டுவன ஆகிய இடங்களிலும் பெரியமடு மக்களின் அகதி முகாம்கள் அமைந்திருந்தன. பமுணுகம சென்ற மக்களில் ஒரு தொகையினர் தஞ்சமடைந்த ஓரிரு வாரங்களில் விருதோடை வந்து சேர்ந்தனர். விருதோடையில் தஞ்சமடைந்தவர்களில் அதிகமானோர் பெரியமடுவையும் அயற்கிராமமான விடத்தல் தீவையும் சேர்ந்தவர்களாவர்.
1990 ஒக்டோபர் அகதி வாழ்வு எனும் அவல வாழ்வு பெரியமடுவின் நான்காம் தசாப்தத்தின் இறுதி அரைப்பகுதியின் பொதுப்பண்பாக காணப்பட்டது. 

அகதிமுகம், பொதுக்கிணறு, பொதுமலசலகூடம், ஊற்றுக் கிணறு மாலைநேர பாடசாலை எனப் பல புதியதொரு வாழ்க்கைக்கு இம்மக்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 1991ம் ஆண்டின் பின்னர் படிப்படியாக பெரியமடு மக்களின் அசைவு விருதோடையை நோக்கி ஆரம்பித்தது. இதனால் பெரியமடு  என்றால் விருதோடை என்று கூறும் அளவுக்கு பெரியமடு மக்கள் விருதோடையை நோக்கி இடம் மாறுவேராக காணப்பட்டனர்.கொட்டரமுல்ல, பம்மண்ணை, மெல்சிரிபுர,  கலாவௌ, சியாம்பெலகஸ்கொட்டுவ, புளிச்சாக்குளம் என இம்மக்கள் தஞ்சமடைந்த இடங்களிலிருந்து விருதோடைக்கே வந்து சேர்வோராக இருந்தனர். இதனால் வாளை விருதோடையிலும் பல்வேறு புதிய பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 1994ம் ஆண்டின் இறுதியில் பெரியமடு மக்களில் 80மூ ற்கு மேலானோர் விருதோடையில் காணப்பட்டனர்.

மெல்லமெல்லத் தொடங்கிய அகதி வாழ்வு, வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய்,நீழ்வதைக் கண்ட மக்கள் அகதிவாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்த முன்வந்தனர்.இதன் படியாக 1991ல் கிராம அபிவிருத்தி நிறுவனம் பெருக்குவட்டானின் காணியொன்றை குத்தகைக்கு எடுத்து அதில் பெரியமடு மக்களை தற்காலிகமாக குடியேறுவதற்கு முயற்சி மேற்கொண்டது. கரிண எடுக்கப்பட்டு நில அளவீடும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஓரிரு குடும்பங்கள் தவிர வேறு எவரும் குடியேறாத நிலையில் அத்திட்டம் கைவிடப்படவேண்டியதாயிற்று. இதைத்தொடர்ந்து 1992ல் விருதோடையில் வசித்த பெரியமடு மக்களால் பெரியமடு இடம் பெயர்ந்தோர் அமைப்பு என்பதை நிறுவி அதன் மூலமாகவும் பெரியமடு மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து குடியமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு முயற்சி கைவிடப்பட்டதோடு அமைப்பும் செயழிந்து போனது.1993ல் மீண்டுமொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. பெரியமடு நலநோம்பு அமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பும் பெரியமடு மக்களை ஒன்றினைத்து ஒரே இடத்தில் குடியமர்த்துவது தொடர்பாக முனைப்புடன் செயற்பட்டது. அனுராதபுர மாவட்டம் திறப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் கனேவல்பொலவிற்கும், பமுணுகமவிற்கும் இடையில் றிரிகலமலைத் தொடருக்கு மேற்காகவுள்ள கந்துபொட எனும் இடத்தில் 100 ஏக்கர் காணியைப் பெற்று அதில் குடியேறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அம்முயற்;;;சியும் கைகூடவில்லை. அத்தோடு அவ்வமைப்பும் செயலிழந்து போனது. ஆயினும் பெரியமடு மக்களின் மீள்குடியேற்ற முயற்சி மட்டும் நிறுத்தப்படவில்லை. இதே முறையிலே ஆரம்பித்தன. இந்த வகையில் பெரியமடுவைச்சேர்ந்த சிலரும் பெருக்குவட்டான், நுரைச்சோலை ஆகிய இடங்களில் இவ்வாறு குடியேறினர். இந்நிகழ்வுகளில் விருதோடையில் வசித்த பெரியமடு மக்கள் மத்தியில் மீண்டும் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்க வைத்தது. எனவே விருதோடையில் மீண்டும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு முன்னைய அமைப்புக்கள் போலல்லாது செயற்பாடு கூடியதாக இயங்கியது.

1994ல் உருவாக்கப்பட்ட அமைப்பு உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கை அரசியலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீள்குடியேற்றத்திற்குச் சாதகமான நிலைமை தோன்றியது. இதனால் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அப்போதைய அரசியல் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த மர்;ஹுர் ஆ.ர்.ஆ.அஷ்ரப் அவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைத்ததன் காரணமாக தற்போது பெரியமடு மக்கள் 1995ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் குடியேறினர்.

இவ்வாறு பெரியமடு வரலாற்றின் நான்காம் தசாப்தம்ட அவலங்கள் நிறைந்த அகதி வாழ்வாகி தசாப்த முடிவில் மீள்குடியேற்றமாக மாறியது. இதே நேரம் ஹுசைனியாபுரத்தில் குடியேறாத பெரியமடுக் குடும்பங்கள் கரம்பை சபாமர்வா இடங்களில் அமைந்த மீள்குடியேற்றங்களிலும் குடியேறினர். எனவே இந்த நான்காம் மீள்குடியேற்றங்களில் நிறைவு கண்டது.
                                 1996-2013
1996ம் ஆண்டில் ஆரம்பமாகிய 5ம் தசாப்தமும் 2006ம் ஆண்டில் ஆரம்பமாகிய 6ம் தசாப்தமும் மீள்குயேற்றகாலமாக தொடர்கின்றன. இம்மீள்குடியேற்றங்களில் வாழ்கின்ற பெரியமடு மக்கள் தாம் மீண்டும் பெரியமடுவில் குடியேறுவதையே தமது ஒரே அவாவாகக் கொண்டுள்ளனர். எனினும் அவ்அவா வாழ் விடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 16 ஆண்டுகளின் பின்னும் கனவாகவே உள்ளது. 2002ம் ஆண்டில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் சமாதானமும் பெரியமடுவுக்கு மீளவும் திரும்புதலும் ஒரு ஒளிக்கீற்றாக தெரிந்தன. 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை நிலவிய போரற்ற சூழலிலே பெரியமடுவைச் சென்று தரிசிக்க கிடைத்ததே தவிர மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்குரிய சூழல் உருவாகவில்லை.

எனினும் எமது பாரம்பரிய பூமியாகிய பெரியமடுவில் போரற்ற சூழலைப்பயன்படுத்தி பெரியமடுவுடன் தொடர்பு படாத தமிழர்கள் பெரியமடு முஸ்லிம்களின் அனுமதியோ அல்லது ஆதரவோ இன்றி  குடியேற்றப்பட்டு வருகின்றனர். இக்குடியேற்ற நிகழ்வானது பெரியமடு முஸ்லிம் பெரும்பான்மையை இல்லாதொழிக்குமி; நடவடிக்கையாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறாக காணப்படுகின்ற போது எந்தவொரு ஆட்சியாளர்களின் காலத்தில் இல்லாதது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைபுலிகளுடன் சமாதான பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டு சரிவராது 2009ம் ஆண்டு பாரிய யுத்தம் நடைபெற்றது. அதன் விளைவாக இருதரப்பிலும் 100க்கணக்கான உயிர்கள் பலியாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல பொதுமக்கள் பலியகினர்.

பிரபாகரனின் மறைவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளும் மறைந்துள்ளன. இந்நிலையில் இடம் பெயர்ந்த நிலையில் உள்ள மக்கள் 20 வருடகங்களின் பின் தங்கள் சொந்த ஊர் கிடைக்கப் பெற்றதில் பேரானந்தம் அடைந்துள்ளனர். இந்நிலயில் புத்தளம், குருநாகல், அநுராதபுரம் போன்ற பல பிரதேசங்களில் வாழ்வோர் தங்களது சொந்த இடங்களை நோக்கி செல்லதைக் காணலாம். அங்கு சில குடும்பங்கள் தற்காலிக வீடமைத்து வாழ்வதைக் காணலாம்.

அகதிகளாக விரட்சி அடிக்கப்பட்டடு எந்தவித சொத்துக்களையா செல்வங்களையோ கொண்டிராத நிலையில் ஆரம்பத்திலிருந்து தமது ஒவ்வொரு நிலைகளையும் புத்தள மண்ணில் கட்டியெழுப்பிய பெரியமடு மக்கள் அவற்றை துறந்து விட்டு மீண்டும் பெரியமடு சென்று வாழ்வதைப்பற்றி சிந்திக்கின்றார்கள். அதே நேரம் தமது பூர்வீக மண்ணையும் விட்டுத்தர தயங்குகின்றார்கள்.  இதனால் இருதலை கொல்லி எறுப்புகளாக, இரண்டு ஓடங்களில் கால் வைத்த நிலையில் புத்தளத்திலும் மன்னாரிலும் தமது வாழ்நாள்களை கழிக்கின்றார்கள். இது பெரியமடுவின் புதியதொரு அவதாரமாகவம் அமையலாம்

இன்று சுமார் மீண்டும் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அஹதிகளாக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் எந்த வித வீட்டு திட்டமும் கிடைக்கப்பெறாத நிலையிலும் அடிப்படை வசதிகள் இன்றியும் பெரும் துயரத்தில் வாழ்கின்றோம் என பெரியமடு வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

1 comment:

  1. நெஞ்சு பொறுக்காது .....இதற்கு காரணமானவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவர்!

    ReplyDelete

Powered by Blogger.