விதைக்கப்பட்ட நஞ்சும், நம்மீதுள்ள பொறுப்பும்
(SAFARAN BIN SALEEM)
கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக சில இனவாத அமைப்புகள் முஸ்லிம்கள் மீது பல இட்டுக்கட்டுகளை சுமத்திய வண்ணம் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் பௌத்த இளைய சமூகத்தின் மத்தியில் தமது கருத்துக்களை தினிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இது எதிர்காலத்தில் எமது நாட்டின் இன ஐக்கியத்துக்கு பெரியதோர் சவாலாக காணப்படலாம்.
சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களினூடாக சுமார் 22 வயதை விட குறைந்த சில சிங்கள மாணவர்களிடம் இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்களால் அளிக்கப்பட்ட பதில்களை மூன்று வகையாக நோக்கலாம்.
1. முஸ்லிம்கள் மீது நல்ல அபிப்ராயம் கொண்ட மாணவர்கள்.
2. முஸ்லிம்கள் மீது திருப்தியற்ற அபிப்ராயம் கொண்ட மாணவர்கள்.
3. முஸ்லிம்கள் மீது விரோத போக்கை கொண்ட மாணவர்கள்.
இதில் 3வது வகையில் கூறப்பட்ட மாணவர்கள் கடுமையான நிலைப்பாட்டில் காணப்படுகின்றமையை அவர்களது கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றது.
உதாரணத்துக்காக அவர்களின் ஒருவரது கருத்தை இங்கு தருகின்றேன். “LTTE ஐ நான் எதிர்கின்றேன், ஆனால் தமிழர்கள் எமது நண்பர்கள், அதே வேளை முஸ்லிம்கள் எமது எதிரிகள், அவர்கள் நரியை போன்றவர்கள்”.
இவ்வாறான கருத்துக்கள் மூலம் இனவாதிகள் சிங்கள மாணவர்களின் உள்ளங்களை எவ்வளவு திசை திருப்பியுள்ளார்கள். எவ்வாறு இளம் உள்ளங்களில் நஞ்சை விதைத்துள்ளார்கள் என்பது புளப்படுகிறது.
இவ்வேளையில் எம்மீதுள்ள பொறுப்பினை குறித்து சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். குறிப்பாக வாலிப சமூகம் இவ்வேளையில் காத்திரமாக எமது எதிர் கால ஐக்கியத்துக்கு வழிகளை தேட வேண்டும். சிங்கள சகோதரர்களுடன் ஆக்கபூர்வமான கருத்து பரிமாறல்களில் ஈடுபடவேண்டும். கருத்து பரிமாறும் போதும் கலந்துரையாடும் போதும் நிதானமாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் கருத்து பரிமாறும் போது அவர்கள் எமது மார்கத்தை பற்றி தவறாக பேசலாம். அப்போது அவர்களுக்கு முறையாக, நிதானமாக, பொறுமையாக எமது மார்கத்தை எத்தி வைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை வெறுமனே கேலிக்கூத்துகளுக்கும், வேடிக்கைக்கும் மட்டும் பாவிக்காது எமத மார்கத்தை எத்தி வைப்பதட்கும், எமது மார்க்கம் பற்றி விதைக்கப்பட்டுள்ள தப்பபிப்ராயங்களை அகற்ற முயற்சிக்க வேண்டும்.
சிங்கள மொழி ஆற்றல் கொண்டவர்கள், சிங்கள மாணவர்கள் அதிகம் பாவிக்கும் ஊடகங்களில் இஸ்லாம் குறித்தான ஆக்கங்களையும், அவர்கள் மீது தினிக்கப்பட்டுள்ள நச்சு கருத்துக்களை அகற்றக் கூடிய கருத்துக்களை எழுத வேண்டும். எமது அஃலாக்கினூடாக ஒரு சிறந்த தஃவவை மேற்கொள்ள திட சங்கற்பம் பூனூவோம்.
யா அல்லாஹ், இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் சிங்கள இளைய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள நஞ்சை அகற்றி விடுவயாக. எதிர்கால இலங்கையை ஐக்கிய இலங்கையாக மாற்றி விடுவாயாக.
Post a Comment