இஹ்வான்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யும் எகிப்திய இராணுவ நிர்வாகம்
எகிப்து நாட்டில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தினைச் சேர்ந்த முகமது மோர்சியின் ஆட்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. ராணுவத்தினரால் பதவி இறக்கம் செய்யப்பட்டபின் மோர்சி தொடர்ந்து பாதுகாவலில் இருப்பதாகத் தெரிஇஹ்வான்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யும் எகிப்திய இராணுவ நிர்வாகம்கின்றது. இஸ்லாமிய இயக்கத்தினைச் சேர்ந்த மோர்சி ஆதரவாளர்கள் பலரும் காவலில் உள்ளனர். சிலர் கலவரங்களின்போது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போதைய எகிப்திய அரசு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பையும் தடை செய்யப்பட்ட ஒன்றாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மீதான 15 நாள் முறையீடு சென்ற திங்கட்கிழமை அன்று முடிவுறும் நிலையில் இருந்தது. ஆயினும், இடையில் வரும் மூன்று நாட்கள் பொது விடுமுறை கருதி அதற்கு முன்னரே இதற்கான தடை விலக்கப்பட்டதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
சட்டம் மூலமும் இந்த இயக்கத்தினர் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் நீதிமன்றத் தீர்ப்பினைத் தெரிவித்தார். இதன்பின்னர் இந்த அமைப்பின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், இவர்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட அனைத்து சமூக சேவை இயக்கங்களும் கூட தடை செய்யப்பட்டு இவை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடையை நிர்வகிக்கும் பொறுப்பு கொண்ட சமூக ஒற்றுமைக்கான அமைச்சகம் கமிட்டி ஒன்றை நியமித்து இந்த செயல்களை நடைமுறைப்படுத்தும் என்று தகவல் தொடர்பாளரான ஹனி மஹன்னா தெரிவித்தார். தொண்டு அமைப்புகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தால் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு அவை அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று மஹன்னா கூறினார்.
கடந்த 85 வருடங்களாக நிழல் மறைவில் இருந்த ஒரு அரசியல் சார்புடைய இயக்கம் மீண்டும் மறைவாக செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆயினும், முன்புபோல் எகிப்து மக்களின் வாழ்விலிருந்து அவர்களை மறைப்பது எளிதான காரியமாக இருக்காது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Post a Comment