Header Ads



புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டவையே - மகிந்த தேசப்பிரிய

(sfm) புத்தளம் புனித அன்ரூ வித்தியாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டவை என தேர்தலகள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்ததை அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெளிவு படுத்தும் ஒன்றுகூடல் ஒன்று 1-10-2013 முற்பகல் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.

இந்த கலந்துரையாடலின் போது, தேர்தல்கள் ஆணையாளர், கட்சியின் பிரதிநிதிகளுக்கு நீண்ட விளக்கத்தை அளித்தார்.

இந்த நிலையில், எதிர் காலத்தில் வாக்கெண்ணும் பணிகளில் இருந்து விருப்பு வாக்குகள் எண்ணப்படுவது வரையிலான சகல செயல்பாடுகளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணையாளர் இதன் போது தீர்மானித்தார்.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலின் பின்னர்  கருத்து தெரிவித்த ஜே.வி.பி இன் சட்ட அதிகாரி சுனில் வட்டகல புத்தளம் வாக்குச் சீட்டு குறித்த மேலதிக நடவடிக்கைகள் விசாரணை மட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பும் இணைந்திருந்தது.

இதன் போது கருத்து வெளியிட்ட கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டவை எனவும், கணக்கிடப்பட்டவை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.