முதலாம் இராஜசிங்கனின் கோட்டையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
(Nf) சீத்தாவக்கை இராசதானியின், முதலாம் இராஜசிங்க மன்னனின் கோட்டையின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் படிகளின் சிதைவுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் திஸ்ஸ மதுரப்பெரும தெரிவித்துள்ளார்.
ஆய்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாயாதுன்னே அரசனின் மகனான டிக்கிரி பண்டார முதலாம் இராஜசிங்கன் என்ற பெயரில் சீதாவக்கை இராசதானியை ஆட்சி செய்து பின்னர் கண்டி இராசதானியையும் ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.
கி.பி 1581 - 1593 வரை போர்த்துகீசருக்கு எதிராக முதலாம் இராஜசிங்க மன்னன் பல்வேறு போர்களை முன்னெடுத்தாக வரலாற்றில் அறியக்கிடைக்கிறது.
Post a Comment