நரேந்திர மோடியின் முட்டாள் நம்பிக்கைகள்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதன் முதலாக உ.பி., மாநிலத்தில் பங்கேற்கும் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு ஜோடி வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புகள் பொதுக்கூட்ட மைதானத்தில் புதைக்கப்பட்டன. மேலும் மூத்த ஜோதிட வல்லுனர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவரை வரவேற்க கான்பூர் நகர் முழுவதும் அலங்கார போஸ்டர்களால் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் எனவும், பல லட்சம் பேர் கூடிய வெற்றி கூட்டமாக முடிக்க இங்குள்ள பா.ஜ.,நிர்வாகிகள் ஜோதிட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதன்படி வெள்ளியால் செய்யப்பட்ட 2 பாம்புகளுக்கு பூஜை செய்து பின்னர் இந்த மைதானத்தில் புதைக்கப்பட்டது. இந்த பாம்புகள் புதைப்பதால் இங்குள்ள பேய், பீடைகள் ஒழியும் என நம்புகின்றனர். மேலும் மோடி வரும், கிளம்பும், நேரம் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இந்த மேடையில் மோடியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் அமரும்படியும், பக்கவாட்டில் நிர்வாகிகள் அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
முஷாபர்நகர் கலவரத்திற்கு பின்னர் மோடி கான்பூர் வருவதால் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், சிறுபான்மையினர் என பல லட்சம் பேரை திரட்ட பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
Post a Comment