Header Ads



வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்ப தயாராகுவோம்!

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் (17.10.2013) அனுஷ்டிக்கப்படுகிறது. 

(அட்டாளைச்சேனை எஸ்.எல்;. மன்சூர்)

வறுமை என்பது எம்மை சுற்றிவரும் அரக்கனாவான். வரவுக்கேற்ற செலவுகளை செய்வதன் மூலம் வறுமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பார்கள். இன்றைய உலகில் எல்லாமட்டங்களிலும் வறுமை ஏற்பட்டுள்ளது. பொருள்களின் விலையேற்றம், குறைவான சம்பளம், குறைந்த வருமானம், உழைப்புக்கேற்ற ஊதியமற்ற தன்மை, குடும்பத்தில் தங்கிவாழ்வோர் அதிகம் இவ்வாறு பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதனை நினைவிற் கொண்டு உலக வறுமை ஒழிப்பு தினம் (ஐவெநசயெவழையெட னுயல கழச வாந நுசயனiஉயவழைn ழக Pழஎநசவல) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

இலங்கையில் வருமைக் கோட்டுக்குக் கீழாக வாழுகின்ற மக்கள் தொகை அதிகம். இருப்பினும் ஒவ்வொரு அரசாங்கமும் வறுமை ஒழிப்புக்கான முஸ்தீபுகளை எடுத்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் வறுமை ஒழிப்புத் திட்டமானது சற்று வித்தியாசமானது அதாவது திவிநெகும எனும் வாழ்வின் எழுச்சிச் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களின் பொருளாதார மேம்பாட்டை கட்டியெழுப்ப இத்திட்டம் உதவிடுகிறது. அந்தவைகயில் வழங்கி குடும்ப பொருளாதாரத்தையும் போஷாக்கையும் அபிவிருத்திச் செய்யும்  வாழ்வின் எழுச்சித்திட்டமான திவிநெகும திட்டத்தின் ஐந்தாம் கட்டம் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து  வைக்கப்பட்டது. அலரி மாளிகை வளவில் பலாக்கன்று ஒன்றை நாட்டி ஜனாதிபதி இதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள கிராமசேவையாளர் பிரிவுகளில்  14,022 மரக்கறிவிதைகள், பழக்கன்றுகள், சிறு ஏற்றுமதிப் பயிர்கள், மருத்துவத் தாவரங்கள் மற்றும் 125,000 திவிநெகும மாதிரி வீட்டுத்தோட்டங்கள் அமைக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களை  அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களது உதவியுடன்  இந்த 125,000 திவிநெகும மாதிரி வீட்டுத்தோட்டங்களை அமைப்பதற்கான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. 'வளமான இல்லம் நிறைவான தாயகம்' என்ற தொனிப்பொருளில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகிய திவிநெகும திட்டத்திற்கு,  நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டு, கிராமிய, நகரரீதியில் வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, வீட்டுத்தோட்டம் என மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு 18 அமைச்சுகள் பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நாடுதழுவியரீதியில் வறுமை ஒழிப்புக்கு இத்திட்டம் வெற்றியளிக்கும் என்பது திண்ணம்.

இதேவேளை இலங்கையின் வறுமையினை இல்லாமலாக்குவதற்கான செயற்றிட்டங்களில் ஈடுபட்டுள்ளதை பாராட்டியுள்ள இறையாண்மை குழுவு, இலங்கையில் வறுமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு குழுவின் இயக்குநர் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் அண்மையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் நாடு அடைந்துள்ள பொருளாதாரத்துறை முன்னேற்றங்கள் பற்றி இறையாண்மை மதிப்பீடு குழுவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ விளக்கமளித்தார். இலங்கையில் இப்போது அரிசி, சோளம், பயறு மற்றும் பிற உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளமையால் அவற்றின் இறக்குமதிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற வீதிகள்-நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தல்,  கட்டுமானத்துறை,  மீன்பிடித்துறை அபிவிருத்தி, உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் வலுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றியும் அமைச்சர் பஸீல் ராஜபக்ஸ்ஸ விளக்கமளித்தார்.

உலகின் பலநாடுகளில் இவ்வாறு வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்தும் சரியான முறையில் வெற்றியளிப்பதில்லை. ஆனால் பங்காளாதேசத்தில் தனிநபர் ஒருவரின் விடாமுயற்சி காரணமாக வறுமை ஒழிப்புக்கான திட்டம் பாரிய வெற்றிபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது வறியவர்களுக்கு கடனுதவி வழங்குவதற்கான 'கிராமிய வங்கி'  (புசயஅநநn டீயமெ) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் பங்களாதேசத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் முஹம்மது யூனுஸ். அவரது இந்த முயற்சிக்காக 2006ஆம் ஆண்டு 'அமைதி'க்கான நோபல் பரிசினையும் பெற்றுக் கொண்டார். 1970களில் பங்களாதேசத்தில் நிலவிய கடும் பஞ்சமே முஹம்மது யூனுஸ் இத்திட்டத்தை தொடங்க மூலகாரணமாக இருந்தது.  அந்தக் கொடுமையான காலத்தைப் பற்றி அவர் தனது 'வறியவரின் வங்கியாளர்' (டீயமெநச வழ வாந Pழழச) என்ற நூலில் நினைவு கூர்கிறார்.

1974இல் பங்களாதேசத்தை கடும் பஞ்சம் பீடித்துக் கொண்டது.  பொருளியல் துறைத் தலைவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த சிட்டகொங் பல்கலைக்கழகம் நாட்டின் தென்கிழக்குக்கோடியில் அமைந்திருந்தது.  நாட்டின் வடபகுதியில் உள்ள குக்கிராமங்களில் நிகழும் பட்டினிச்சாவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வெளியான தகவல்களை ஆரம்பத்தில் நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால், பிறகு எலும்புக்கூடுகளைப் போன்ற மனிதர்கள் தலைநகர் டாக்காவின் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் தென்பட ஆரம்பித்தார்கள்.  துளித்துளியாக வந்து கொண்டிருந்தவர்கள் வெகு விரைவிலேயே பெருவெள்ளமாகிப் போனார்கள்.  எங்குப் பார்த்தாலும் பட்டினி மக்கள்!  பெரும்பாலும் அசைவற்று அமர்ந்திருக்கும் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துக் கொள்வதுகூட கடினமாக இருந்தது.  அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள்;  ஆண்கள், பெண்கள், குழந்தைகள்!  வயோதிபர்கள் சிறுவர்களைப் போலவும் சிறுவர்கள் வயோதிகர்களைப் போலவும் இருந்தார்கள்.'

கடும் பசியில் இருந்த அம்மக்கள் எந்த ஒரு கோஷத்தையும் எழுப்பவில்லை.  நன்றாக உண்டு, தூங்கி எழுந்து கொண்டிருந்த எம்மைப் போன்ற நகர மக்களிடம் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.   மாறாக, அவர்கள் சாவை எதிர்நோக்கி எங்கள் வீட்டு வாசல்களில் அமைதியாக படுத்துக் கிடந்தார்கள்.  சாவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.  ஆனால் பட்டினியால் சாவது என்பது ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்று!  அது 'ஸ்லோ மோஷனில்' நிகழ்கிறது.  வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான இடைவெளி வினாடிக்கு வினாடி குறைந்துக் கொண்டே வந்து ஒருநேரத்தில் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமலாகி விடுகிறது.  தூக்கத்தில் நிகழ்வதைப்போல உணரவே முடியாத நிலையில் மிக அமைதியாகச் சாவு அவர்களைத் தழுவிக் கொள்கிறது. 

இத்தனையும் வேளாவேளைக்கு அவர்களுக்கு ஒரு கைப்பிடிச்சோறு கூட கிடைக்காததுதான் காரணம்.  எல்லா வளங்களும் கொட்டிக்கிடக்கும் இந்த உலகில், அதன் விசித்திரங்களைக் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பச்சிளங்குழந்தை பாலுக்காகக் கதறி அழுகிறது. அது கிடைக்காமலேயே தூங்கியும் விடுகிறது.  அடுத்தநாள் உயிர்வாழத் தேவையான சக்தி அதற்கு இல்லாமல் போய்விடலாம். ஆம்... வறுமை மிகவும் கொடியது!  சமுதாயத்தில் ஒரு பங்கினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது 'எனக்கு அதனால் பாதிப்பில்லை என்பதால், நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?' என யாரும் ஒதுங்கியிருக்க முடியாது. வறுமையை ஒழிப்பதற்காகத் திட்டங்கள் தீட்டாத நாடுகளே இல்லை எனும் அளவிற்கு அது உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.  'வறுமையை ஒழிக்க வேண்டும்' என்ற நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால், அதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயனளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி என பொருளியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பொருளியல் நிபுணர் முஹம்மது யூனுஸ் இவ்வாறு கூறுகின்றார். 'தான தருமங்கள் செய்வதுதான்  வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவது என்பதாக நாம் பெரும்பாலும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  வறுமை ஏற்படுவதன் காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை தவிர்ப்பதற்காக நாம்தான் தருமங்கள் செய்கிறோமே என்ற மேலோட்டமான எண்ணத்தில் நமது பொறுப்பை, கடமையை உதறித் தள்ளி விடுகிறோம். வறியவர்களுக்கு உதவுவதற்காக அல்லாமல் நம் மனசாட்சிக்கு சின்ன ஒரு திருப்தி ஏற்படுவதற்காகவே நாம் தருமங்கள் செய்கிறோம். தருமங்கள் செய்வது வறுமை எனும் பிரச்னைக்குத் தீர்வு ஆகாது.  மாறாக, அது வறுமையை இன்னும் அதிகரிக்கவே உதவும்.  தருமங்கள் வறியவர்களின் சுய முயற்சிகளை முடக்கி, தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலேயே தடுத்து விடுகின்றன.

வறுமை ஒழிப்புநாhள இந்நாளான அன்று (1987 ஆம் ஆண்டு) முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது. ஏழ்மை நிலையை யடிளழடரவந அல்லது தீவிர ஏழ்மை நிலை என்றும் சநடயவiஎந ஏழ்மை நிலை என்றும் அதன் வீச்சை வேறுபடுத்தி காட்டுவர். ஏழ்மை நிலையை ஒரு மக்கள் தொகையின் வீதத்தில் குறிப்பிடலாம்.

புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் (ஆடைடநnnரைஅ னுநஎநடழிஅநவெ புழயடள) என்பது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளும் 23 அனைத்துலக அமைப்புகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவேற்ற நிர்ணயித்த வளர்ச்சி இலக்குகள் ஆகும். அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த இலக்குகள் அமைகின்றன. தீவிர வறுமை என்பது உணவு, நீர், உறையுள், கழிவுநீக்க ஏற்பாடுகள், நலம், கல்வி, தகவல் போன்ற அடிப்படைத் தேவைகளை நிலையாக அணுக முடியாத கையறுநிலையைக் குறிக்கிறது. ஒருவர் நாளுக்கு அகூ 1.25 கீழ் வாழ்ந்தால் அது தீவிர வறுமை என்று உலக வங்கி வரையறை செய்கிறது. இன்று சுமார் ஐந்து பேரில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது 2010 இல் 1.2 பில்லியன் மக்கள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் இது ஏறத்தாழ அரைவாசியாகக் குறைந்துள்ளது. வளர்ச்சிபெற்று வரும் நாடுகளில் தீவிர வறுமையில் வாழ்ந்தோர் 1990 இல் 47மூ ஆகவும், 2005 இல் 27மூ ஆகவும், 2008 இல் 24மூ ஆகவும் குறைந்துள்ளது.

இவ்வாறு உலகை ஆட்கொண்டுள்ள வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கத்தினாலோ, அரசின் திட்டங்களினாலோ முழுமையாக ஒழிக்க முடியாது. காரணம் மக்கள் ஒத்துழைப்பு வழங்காதவரை முடியாததாகிவிடும். எனவேதான் அதனை முறையாக அமுல்படுத்தி வெற்றிகாணவேண்டுமானால் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கவேண்டும். கடந்தகாலங்களில் வறுமை ஒழிப்புக்கான முத்திரைகள் வழங்கப்பட்டன. மக்கள் நிவாரணங்களை பெறுவதன் காராணமாக உழைப்பிலிருந்து தன்னை விடுவித்து கையேந்துகின்ற நிலைமைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. இலங்கையை சுனாமி பேரலைகள் தாக்கியதன் பின்னர் மக்கள் இலவசத்தையே எதிர்பார்த்து வருடக் கணக்கில் வீடுகளில் முடங்கிப்போயிருந்தனர். சுனாமி இந்தியாவையும் தாக்கியது. வெளிநாட்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும் அவர்களுக்கு உதவவில்லை. அரசு வழங்கிய சொற்பத்தை வைத்தே அவர்கள் தங்களை நிலைநிறுத்தினர். நாமோ எப்போதும் இலவசத்திற்கும், நிவாரணத்திற்கும் கையேந்துகின்ற ஒருநிலைமை எமது மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்நிலைமை ஒழிக்கப்பட்டு அரசு மற்றும் நிறுவனங்கள் வழங்குகின்ற சொற்பத் தொகையை முதலீடாகக் கொண்டு பாரியளவு உற்பத்தியிலும், தொழில்துறைகளிலும் ஈடுபட்டு வறுமை என்கிற அரக்கனை விரட்ட முடியும். அதற்கான உத்வேகம் எம்முள்ள வரவேண்டும். வெறுமனே வெட்டிப்பேச்சுக்களை விடுத்து உயிரோட்டமான பங்களிப்புக்களை எம்மால் விடுக்கமுடியும். இன்று கல்வி இலவசமாக வழங்கப்படுகின்றது. ஆனால் வறுமையை காரணம் காட்டி பல குழந்தைகள் பாடசாலைக்குள் வராமல் வீனே காலத்தைக் கழிக்கின்றனர். கல்விக்கு வறுமை தடையல்ல என்று அண்மையில் ஒரு கல்வியதிகாரி தெரிவித்திருந்தார். எனவே, வறுமையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப சிறந்த கல்வியின் மூலம் இதனை எதிர்காலத்தில் மிளிரச் செய்ய நாமும் முயற்சிப்போம். பொருளாதார மோட்சத்தை கடக்க அரசின் திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்போம். இன்றைய வறுமை ஒழிப்புத் தினத்திலிருந்து இதனைக் கைக்கொள்ள முயற்சிப்போம்.

1 comment:

Powered by Blogger.