Header Ads



கசினோ சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தற்­காக பாகிஸ்­தா­னியர் தான் வரு­வார்கள் - ஞான­சார தேரர்

கசினோ சூதாட்டம் சட்­ட­மாக்­கப்­பட்டால் கொழும்பின் நிரு­வாகம் பாகிஸ்­தா­னிய போதை­வஸ்து பாதாளக் குழுக்­களின் கைக­ளுக்கு சென்று விடு­வ­தோடு மட்­டு­மன்றி ஆயுதக் கலா­சா­ரமும் விப­சா­ரமும் தலை­தூக்கும் என்று எச்­ச­ரிக்கை விடுக்கும் பொது பல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உல்­லாசப் பிர­யா­ணத்­து­றையை அபி­வி­ருத்தி செய்ய கசினோ சூதாட்டம் சட்­ட­மாக்­கப்­பட வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­குவோர் பிசா­சுகள் என்றும் தேரர் விமர்­சித்தார்.

கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதனைத் தெரி­வித்தார். தேரர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 

கசினோ சூதாட்­டத்தை சட்­ட­மாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையை முழு­மை­யாக எதிர்க்­கின்றோம்.

அன்றும் இன்றும் என்றும் கசினோ சூதாட்­டத்தை நாம் எதிர்க்­கின்றோம் அவ் முடிவில் மாற்றம் இல்லை. வெளி­நாட்டு உல்­லாச பிர­யா­ணத்­து­றையை நாட்டில் வளர்ச்­சி­ய­டையச் செய்ய வேண்­டு­மானால் கசி­னோக்கள் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அதற்­கான சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என அமைச்­சர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­களை வழங்­கு­ப­வர்கள் யார்?

கசினோ சூதாட்­டத்தால் உல்­லாசப் பிர­யாணத் துறையை வளர்ச்­சி­ய­டையச் செய்ய முடி­யாது. தாய்­லாந்தில் உல்­லாசப் பிர­யாணத் துறையை வளர்ச்சி பெறச் செய்­வ­தற்­காக கசி­னோக்கள் ஆரம்­பிக்­கப்­பட­வில்லை.

இந்­தியா இலங்­கையில் கசினோ சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தற்­காக இந்­தி­யர்கள் வரப்­போ­வ­தில்லை. பாகிஸ்­தா­னியர் தான் வரு­வார்கள் ஏற்­க­னவே கிழங்குக் கொள்­க­லன்­களில் பாகிஸ்­தா­னி­லி­ருந்து போதை­வஸ்­துக்கள் கொண்டு வரப்­பட்­டன.

அது மாத்­தி­ர­மின்றி கருத்­தடை மாத்­தி­ரைகள், போதை மாத்­தி­ரைகள் இங்கு வரு­வது மட்­டுமன்றி குதிரைக்கு உண­வாக வழங்­கப்­படும் பழு­த­டைந்த கடலை, பருப்பு என பல்­வே­று­பட்ட உணவுப் பொருட்கள் பாகிஸ்­தா­னி­லி­ருந்து சட்­டத்­திற்கு புறம்­பான விதத்தில் கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் கசினோ சூதாட்டம் சட்­ட­மாக்­கப்­ப­டு­மானால் கொழும்பு நகரில் விப­சாரம் தலை­தூக்கும். போதை­வஸ்து மட்­டு­மன்றி போதை மாத்­திரை பாவ­னைகள் அதி­க­ரிக்கும். அது மட்­டு­மன்றி ஆயுதக் கலா­சா­ரமும் தலை­தூக்கும்.

பாங்கொக் நகரைப் போன்று கொழும்பு நகர் பாகிஸ்­தா­னிய போதை­வஸ்து பாதாளக் குழுக்­களின் கைகளின் நிர்­வா­கத்­திற்கு சென்று விடும் ஆபத்து உள்­ளது.

நாட்டை சீரழிக்கும் கலாசாரத்தை பண்பாட்டை சீரழிக்கும் கசினோ சூதாட்டம் வேண்டாம். பெளத்த குரு ஒருவர் மட்டும் தீக்குளிப்பதால் இதனை தடுத்து விட முடியாது பலர் தீக்குளிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் ஞானசாரதேரர் தெரிவித்தார்.

4 comments:

  1. ஒங்களுக்கும் ஒரு சைட் ல வெள்ள பொடவ போட்டு மரியாதையா குடிச்சி , கும்மி யடிசி கும்மாளம் போட இடம் தருவாங்க கல் கொட அதே.... டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...

    ReplyDelete
  2. 'நம்மவர்கள் நல்லவர்கள்' என்றுதான் இந்த கலகொட அத்தே தேரர் சொல்லவருகிறார்கள் போல் தெரிகிறது.....??? இவருக்கு பன்சலையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறது. அதுமட்டுமா சந்திக்கு சந்தி சாராய தவரனையின் அன்றாட 'வாடிக்கையாளர்கள்' பாகிஸ்தானியர்களா ? என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொன்டால் தெரியும்....? எல்லோரும் 'அறிக்கை' விடுவதில் மாத்திரம் வல்லவர்கள். திறக்கப்படப்போகும் கசினோக்களைப் பற்றி பேசும் இவர்கள் சட்டரீதியற்ற அதேநேரம் அரசின் மரைமுகமான ஆதரவுடன் இயங்கும் 'கசினோ'க்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

    ReplyDelete
  3. நாட்டு முஸ்லிம்களே! ஒட்டுப்போட்டவர்களே! நீங்கள் ஓட்டுப்போட்டு பாராளமன்றம் அனுப்பியவர்கள் இந்த சட்டத்துக்கு கை தூக்கினால் அல்லாஹ் இடத்தில் உங்களுக்கு கிடைப்பது என்ன?

    ReplyDelete
  4. இவனுக்கு கொஞ்சம் என்றால் போதும் முஸ்லிம்கள் இல்லாவிட்டால் பாகிஸ்தன் என்று கத்துறான் இவண்ட வாய்ல மிரிக்கணும்

    ReplyDelete

Powered by Blogger.