அர்ஜென்டினா ஜனாதிபதியின் இதயத்துடிப்பு குறைந்துவிட்டதாம்
அர்ஜென்டினாவின் அதிபராகப் பணியாற்றிவரும் கிறிஸ்டியானா பெர்னாண்டஸ் (வயது 60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி தலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவே தெரிவித்தது. அதன்பின்னர் தனது அலுவலகப் பணிகளை அவர் தொடர்ந்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இதயத்துடிப்பு குறைவாக இருந்த காரணத்தினால் அதிபர் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். அடிக்கடி அவருக்குத் தலைவலி வந்த காரணத்தினால் மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் தலைக்கு உரிய பரிசோதனைகளை செய்தனர். அப்போது அவரது மண்டை ஓட்டிற்கும், மூளைக்கும் இடையே ரத்தக்கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத ஓய்வில் இருக்கும்படி அறிவுரை அளித்துள்ளனர். இந்த சமயத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள கட்டியானது தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு அதற்குண்டான சிகிச்சைமுறைகள் அளிக்கப்படும் என்று அதிபரின் தகவல் தொடர்பாளரான அல்ப்ரெடோ சொக்கிமாரோ அதிபரின் கையெழுத்திடப்பட்ட அறிக்கையை பத்திரிகையாளர்களிடையே வெளியிட்டார்.
Post a Comment