Header Ads



முஸ்லிம்களை வெறுக்கிறேன், யூதர்களை விரும்புகிறேன் - சிறிதரன் எம்.பி. (வீடியோ)


நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்கள சகோதரர்களை நேரில் சென்று அச்சுறுத்தும் விதத்தில் (திரும்பவும் அடிபடப் போகிறோம்) என மிரட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட தமிழ் இனவாத பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேச்சினை கீழ்வரும் வீடியோவில் காணலாம்.

கடந்தவருடம் கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதும் முஸ்லிம்களின் செயற்பாடுகளில் தனக்கு அதிகமாக வெறுப்பு இருப்பதாக பகிரங்கமாக கூறிய இந்த சிறிதரன் எம்.பி. தான் என்பது குறிப்பிடத்தக்கது. (அதனையும் கீழ்வரும் வீடியோவில் பார்க்கலாம்)

1990 ஆம் ஆண்டு பாசிசப் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள், தற்போது படிப்படியாக தமது வாழ்விடங்களில் மீளக்குடியேறி வருகின்றனர். இருந்தபோதும் தமிழ் இனவாத செயற்பாடுகள் வடக்கு முஸ்லிம்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்துவருகின்றன. இதன் வெளிப்பாடாக அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு கடமையாற்றச் சென்ற முஸ்லிம் கிராம  அதிகாரி ஒருவர், தமிழ் இனவாதத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் தான் முன்னர் பணியாற்றியே நீர்கொழும்புக்கே சென்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாதச் செயற்பாடுகள் காணப்படுகிற போதிலும், அவை பகிரங்கமாக்கப்படுவதில்லை. ஜப்னா முஸ்லிம் போன்ற இணையங்கள் அவ்வாறு பகிரங்கப்படுத்தினாலும் 'ஜப்னா முஸ்லிம் இணையம் தமிழர் முஸ்லிம் உறவுக்கு பங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது என (சிலர்) புலம்பத் தொடங்கிவிடுகின்றனர் என்பதுதான் இங்கு வேதனைக்குரியது..!

1,  http://www.youtube.com/watch?v=r_wRAPnOJtg

2,  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=h5CYqEhgOcM#t=66



No comments

Powered by Blogger.