கோழிகளை பாதுகாக்க இங்கிலாந்து நிறுவனத்தின் நவீன கண்டுபிடிப்பு
இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டுஷெரி பகுதியில் ஏராளமான வீடுகளில் கோbகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை உலா விடும் போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.
இதை தடுக்க அங்குள்ள ஒரு நிறுவனம் கவச ஆடை ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்தது. இதை கோழிகளின் மீது கட்டிவிட்டால் அதிலிருந்து வெளிப்படும் ஒளிச்சிதறல் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரியவரும். இதன் மூலம் கோழியின் உயிர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
இந்த கவச ஆடைகள் மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் வெளிவருகிறது. ஒரு கவச ஆடையின் விலை ரூ. 1200 ஆகும். இதுபற்றி கண்டுபிடிப்பாளர் ஜோன்ஸ் பவுல் கூறும்போது; இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கவலையை போக்க இதை கண்டுபிடித்தேன்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்கிறார். ஒரே வாரத்தில் 200 கவச ஆடைகள் விற்று தீர்ந்தன. அதிலும் இளம் சிவப்பு நிற ஆடைக்கு கூடுதல் மவுசு நிலவுகிறது.
Post a Comment