Header Ads



ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீளிணைக்க வாய்ப்பு வழங்கப்படும் - கரு

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீளிணைவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவ குழு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசிய கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு சமயத் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் வரவேற்றுள்ளார்.

சுதந்திர இலங்கையில் முதலாவது பிரதமர், தேசபிதா என்ற வர்ணிப்புகளை பெற்ற டீ.எஸ் சேனாநாயக்கவின் 129 வது ஜனன தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்படி, பௌத்த மத சமயத் தலைவர்களின் காலத்தின் தேவையாக அமைந்துள்ள யோசனைகளை தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, விலகிச் சென்றவர்கள் தொடர்பில் தமக்கு எந்தவித குரோதங்களோ, வைராக்கியமோ இல்லை என்று தெரிவித்த அவர், மீளிணையும் போது எந்த பழிவாங்குவதற்கும் எண்ணவி;ல்லை என்றும் கருஜயசூரிய குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.