விக்கினேஸ்வரன் கடமைகளை பொறுப்பேற்றார் - அமைச்சர்களை காணோம்
(farook sihan)
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இதுவரை வடமாகாண அமைச்சர்கள் விபரம் எதுவும் வெளியாகவில்லை. அவர்கள் இதுவரை பதவியேற்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள்.
ReplyDelete//அமைச்சர்கள் காணோம்//
பலருக்கு வட மாகாணத்தை ஜீரணிக்க முடியவில்லை என்பது தெளிவு தெரிகிறது :)
அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அவசர அவசரமா பேசி முடிவு எடுப்பதை விட, தூங்கும் அமைச்சர்கள், தலையாட்டி அமைச்சர்கள் தெரிவு செய்ததை போல இங்கு செய்ய முடியாது. ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும். அதுவும் ஐந்து கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆகா TNA நிதானமா செயல்படுவது வரவேற்கதக்கது. யாருக்காவும் அவசரமாக எதையும் செய்ய முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.
அவசரமா தெரிவு செய்த ஏனைய மாகாண சபை அமைச்சர்கள், முதல்வர்கள் எப்படி தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். யாருக்கு முன்னால் சத்திய பிரமாணம் செய்தாலும் மக்களின் தேவை கருதி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் எங்களிடம் இருக்கிறது. எல்லாத்தையும் விட TNA உள்ளே பிரச்னை வரும் அவர்கள் பிரிவர்கள் என்று வானத்தை பார்த்துகொண்டு இருக்கும் பலருக்கும் சிறந்த விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.