கர்பலா மையவாடிக் காணி விவகார வழக்கு ஒத்திவைப்பு
(பழுளுல்லாஹ் பர்ஹான்;)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள கர்பலா மையவாடிக் காணி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அவதானித்த காத்தான்குடிப் பொலிஸார் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என கருதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை ஒத்தி வைப்பதாகவும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இரு தரப்பினரும் குறித்த காணியை தங்கள் காணியென சொந்தம் கொண்டாடக் கூடாது,அதில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டதாக கர்பலா ஜாமியுல் மனார் ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் கே.எம்.லத்தீப் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
குறித்த காணி விவகாரம் தொடர்பில் சிலர் பல்லாண்டு காலமாக இன நல்லுறவைப் பேணி வரும் தமிழ் முஸ்லிம்களுக்கிடையிடையே இன முறுகலை ஏற்படுத்துவதற்கு முனைவதாகவும் அதற்கு யாரும் துணை போகக்கூடாது எனவும் கர்பலா ஜாமியுல் மனார் ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் கே.எம்.லத்தீப் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த காணி விவகாரம் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் கூட்டமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment