ஆப்கானிஸ்தானத்தில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளால் எந்த பயனும் இல்லை - ஹமீத் ஹர்சாய்
ஆப்கானிஸ்தானத்தில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளால் ஏராளமான பாதிப்புக்கள் தான் ஏற்படுகின்றனவே தவிர, அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எந்த பயனும் இல்லை என, அந்நாட்டு அதிபர் ஹமீத் ஹர்சாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'நேடோ படைகளின் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர்கள் தான் பலியாகி உள்ளனவே தவிர, நாட்டின் பாதுகாப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் பயனளிக்காத நிலையில், அது தேவையில்லாத ஒன்றாகிவிடும்,' என்றார்.
Post a Comment