தள்துவை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை
(சுஹைர் ஷெரீப்)
நடந்து முடிந்த 2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரத்துக்கான (தமிழ் மொழி மூலமான) புலமைப்பரிசில் பரீட்சையில் தள்துவை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவரான மொஹமட் வதீர் மற்றும் றஸ்மினா ஆசிரியை தம்பதியினரின் புதல்வனான எம்.டப்ளியு.எம் வஸ்னி 191 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் மூன்றாவதாகவும் மாவட்டத்தில் முதலாவதாகவும் வந்து வரலாற்றுச் சாதனை படைத்து பாடசாலைக்கு பெறுமை தேடிக்கொடுத்துள்ளார்.
பாடசாலை அதிபர் மொஹமட் அவுன் வகுப்பாசிரியைகளான பாதிமா ரிஷானா மற்றும் பாதிமா தஸ்னீன் ஆகியோரின் வழிகாட்டல் தங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியதாக மாணவர்கள் நன்றி பாராட்டுகின்றனர்.
குறிப்பிட்ட இப்பாடசாலையில் இம்முறை ஐந்து பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளதுடன் அவர்களின் விபரங்கள் வருமாறு:
மாணவன்: எம்.டப்ளியு.எம்.வஸ்னி
புள்ளிகள்: 191
மொஹமட் வதீர் றஸ்மினா ஆசிரியை தம்பதியினரின் புதல்வன்.
மாணவி: எம்.ஐ.எப்.சாலிஹா
புள்ளிகள்: 172
மோஹமட் இக்பால் ஐனுள் தகியா தம்பதியினரின் புதல்வி

மாணவன்: எஸ்.வை.ஜெரோம் அர்வின்
புள்ளிகள் :165
சூசை யேசுராஜா மற்றும் பெருமாள் பஞ்சவர்ணம் தம்பதியினரின் புதல்வன்.
மாணவி :எம்.எப்.எப்.றிம்ஸா
புள்ளிகள் : 163
மொஹமட் பைஸர் மற்றும் பாதிமா றிஸானா தம்பதியினரின் புதல்வி.
மாணவி :எம்.எச்.எப்.ஹசனியா
புள்ளிகள் : 157
மொஹமட் ஹஸன்தீன் மற்றும் பாதிமா நளீபா தம்பதியினரின் புதல்வி.
Post a Comment