ரணில் விக்ரமசிங்க, பௌத்த தேரர்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவு
(Nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகல் உள்ளிட்ட எட்டு விடயங்களை நிறைவேற்றுவதாக ரணில் விக்ரமசிங்க தேரர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வழங்கபட்டிருந்த கால அவகசாம் 29-10-2013 நிறைவடைகின்றது.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பில் தாம் முன்வைத்த எட்டுக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கிதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகல் உள்ளிட்ட எட்டு விடயங்களை நிறைவேற்றுவதாக ரணில் விக்ரமசிங்க தேரர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வழங்கபட்டிருந்த கால அவகசாம் இன்றுடன் நிறைவடைகின்றது.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பில் தாம் முன்வைத்த எட்டுக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கிதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவிக்கின்றது.
............................
ஐக்கிய பிக்குகள் முன்னணி, ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பலரும் எதிர்பார்துள்ள போதிலும் ஒருசிலர் மாத்திரம் அது அவசியம் இல்லை என்று கூறுவதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் கிராபே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு செயற்படும் நபர்கள் இருப்பின், அவர்கள் கட்சியையோ அல்லது ரணில் விக்ரமசிங்கவையோ நேசிப்பவர்கள் அல்லவென கிராபே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
ஐக்கிய பிக்குககள் முன்னணியின் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் வெற்றி பெறுவது கட்சி மாத்திரம் அல்லவெனவும், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைவருமே வெற்றி பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கட்சியின் சிலர் பதவி மோகத்தில் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயற்சி செய்வதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உலபனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்
தேசிய அமைப்பாளர் ஐக்கிய பிக்குகள் முன்னணி உலபனே சுமங்கல தேரர் தெரிவித்த கருத்து :-
"ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், கட்சியை ஒன்றுபடுத்துவதற்கும் ஐக்கிய பிக்குகள் முன்னணி செயற்படுகின்றது. இவ்வாறு செயற்படும் வேளையில் தமது பதவி தொடர்பில் உள்ள அச்சம் காரணமாக தயா கமகே கட்சியை வெற்றி நோக்கி கொண்டு செல்வதற்கு உள்ள இயலுமை இல்லாமல் செய்ய குரோத மனப்பான்மையுடன் செயற்படுவதாகவே கூற வேண்டும். எனவே தயா கமகே ஊடங்கள் ஊடாக கட்சியினுள் ஏற்படவுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் சதித்திட்டங்களில் ஈடுபடுகின்றார். எனவே ஐக்கிய பிக்குகள் முன்னணிக்கும் ரணில் விக்ரமசிங்கவும் இடையில் கட்டியெழுப்படும் நல்லிணகம் மூலம் முன்னோக்கி பயணிக்க முயற்சி செய்யும் வேளையில் இடை நடுவில் பாய்ந்து அதனை சீர்குலைக்க வேண்டாம் என தயா கமகேயிடம் கேட்டுக் கொள்கின்றோம்"
Post a Comment