பல்ககலைக்கழகங்களில் புதிய கல்வி முறை அறிமுகமாகிறது
(nf) அனைத்து பல்கலைக்கழங்களினதும் கல்வி முறையை, அடுத்த வருடம் முதல் மாணவர்களை மையமாகக் கொண்டதாக மாற்றியமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமையவே கல்வி நடவடிக்கைகளுக்காக புதிதாக ஆரம்பிக்கும் பாடநெறிகளும், தற்போது இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதியாண்டில் கல்விகற்கும் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளும், அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறியுள்ளார்.
வெளிவாரிப் பட்டப் படிப்புக்களுக்கும் அடுத்த வருடம் முதல் புதிய முறைமையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய கல்வி முறையின் ஊடாக ஆசிரியர்கள் வழிகாட்டியாகவும், ஆலோசனைகளை வழங்குபவர்களாகவும் மாத்திரமே காணப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களே புத்தகங்களை வாசித்து, விடயங்களை தேடியறிந்து அது தொடர்பில் தெளிவுபடுத்தி, குழுவாக இணைந்து செயற்றிட்டங்களை தயாரித்து, விடைகளை தாமாகவே கண்டறிய வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
அரச மற்றும் தனியார் பிரிவுகளின் தொழில்வாய்ப்புக்களுக்கு அமைய, மாணவர்களை பழக்கப்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கம் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment