அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் கல்முனை மேயர் சந்திப்பு
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது மாநகர ஆட்சிக் காலப்பகுதியில் தன்னாலான பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வரலாற்று தடம் பதிக்கும்வகையில் புரட்சிகரமாக முன்னெடுத்துவருகின்றார். அந்தவகையில் இன்னும் பல வேலைத்திட்டங்களுக்கான அனுசரணையாளர்களை பெறும்வகையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றார்.
அந்தவகையில் (17.10.2013) நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்தனவை அமைச்சரின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் முதல்வர் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்களையும், மல சல கூடங்களையும் இலவசமாக வழங்குவதற்கு அமைச்சரினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அமைச்சரை கல்முனை மாநகர சபைக்கு உத்தியோக பூர்வ விஜெயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு முதல்வர் சிராஸ் கேட்டுக் கொண்டார். இவ்வேண்டுகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் இது தொடர்பில் பின்னர் அறியத்தருவதாக தெரிவித்தார்.
Post a Comment