Header Ads



அமெரிக்கா பயிற்சியளித்த ஆப்கானிஸ்தான் இராணுவ கமாண்டர், தாலிபான்களுடன் இணைந்தார்

ஆப்கான் இராணுவ கமாண்டர் முன்ஸிஃப் கான், தாலிபான் அணிக்கு தாவியுள்ளார். ஒரு லோடு துப்பாக்கிகள், இராணுவ உபகரணங்கள் ஆகியவற்றை அவர் கொண்டு சென்றதாக குனார் மாகாண அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்ஸிஃப் கானின் கீழ் பணியாற்றிய 20 அதிகாரிகளும் தாலிபான் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். ஹிஸ்பே இஸ்லாமி என்ற அமைப்பில் இவர்கள் சேர்ந்துள்ளனர். அமெரிக்கா பயிற்சி அளித்த சிறப்புப் படையின் அதிகாரியான முன்ஸிஃப், தாலிபான் கூட்டணியில் சேர்ந்திருப்பது அக்கூட்டணிக்கு பலத்தைத் தரும் எனக் கருதப்படுகிறது.

ஹிஸ்பே இஸ்லாமியின் செய்தித் தொடர்பாளர் சுபைர் சித்தீகி இதனை உறுதி செய்துள்ளார். ஆயுதக் கிடங்கில் இருந்த சக அதிகாரிகளை விடுப்பு அளித்த அவர், சிலரைக் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பி விட்டு பெரும் ஆயுதங்களுடன் போராளிகளின் மையத்திற்கு சென்றார். Tho

No comments

Powered by Blogger.