Header Ads



அல்லாஹ் தன்னைக் காப்பாற்றிவிட்டதாக ஏ.ஆர்.மன்சூர் அடிக்கடி சொல்வார் - பேராசிரியர் நுஃமான்

(யு.எம்.இஸ்ஹாக்)

தேர்தல் ஒரு முதலீடாகவும் அரசியல் அதிகாரம்  பொருள் குவிக்கும் தனிப்பட்ட ஒரு வியாபாரமாகவும்  மாறியுள்ள இன்றய அரசியல் சூழலில் மிகச் சில புறநடைகளையே  நாம் காண முடியும். ஏ.ஆர்.மன்சூர் அத்தகைய புறநடைகளுள்  ஒருவர். அவருடைய கை சுத்தமானது பதினேழு வருடகால அவருடைய அரசியல் வாழ்வில்  தன் பதவியையோ  அதிகாரத்தையோ பயன்படுத்தி  அவர் சொத்துக்கள் எதையும் குவிக்கவில்லை .அதிகார துஸ்பிரயோகத்தில் இறங்கி அவர் தன் கைகளை கறைபடுத்திக் கொள்ளவில்லை.அவர் நினைத்திருந்தால்  பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை  அவர் சேர்திருக்கலாம். அவர் பதவி வகித்த அமைச்சு  அத்தகையது. அதிலிருந்து அல்லாஹ்  தன்னைக் காப்பாற்றிவிட்டான்  என்று அவர்  அடிக்கடி சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

முன்னாள் வத்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரை மருதமுனை மக்கள் பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா   சனிக்கிழமை (19) காலை  மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் காதர் இப்ராஹிம் தலைமையில்  நடை பெற்ற போது விசேட அதிதியாக கலந்து கொண்ட  கல்விமான் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்  மேற்கண்டவாறு கூறினார்.

No comments

Powered by Blogger.