சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டால்..?
(Thoo) சவுதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரையை சட்டவிரோதமாக மேற்கொள்பவர்கள் மீது அந்நாட்டு அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இந்தக் குற்றத்தைப் புரிகின்ற வெளிநாட்டவர்கள் மீதும் சவுதி பிரஜைகள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அனுமதிப் பத்திரம் பெறாமல் ஹஜ் தொழுகை மேற்கொண்டபோது கைரேகை அடையாளம் பதிவு செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரையும் கண்டுபிடித்து தண்டனை அளிக்குமாறு அமைச்சகம் பிராந்திய ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளது.
தவறு புரிந்தவர்களை வரும் ஞாயிறன்று காவல்நிலையங்களுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்காக சவுதி பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேநேரம், சவுதியில் தங்கி வாழும் வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டு, திரும்பி வராமல் 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.
Post a Comment