Header Ads



நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்த சிறுமி வபாத் - அக்குறணையில் சம்பவம்

(TL) கண்டி தென்னங்கம்பரபகுதியில் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்த சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.  அக்குறணையிலுள்ள தனியார் பாடசாலை ஒன்றில் ஆரம்பப்பிரிவில் கல்வி பயின்று வந்த பாத்திமா சீமா ( வயது 5) என்ற சிறுமியே   இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  தென்னக்கும்புர வீதியிலுள்ள நான்கு மாடிகளைக்கொண்ட வீட்டில் நான்காவது மாடியில் நடைபெற்றுவரும்  திருத்தவேலைகளைப் பார்வையிட பெற்றோர் சென்றிருந்தபோது அவர்களின் ஒரே மகளான இச்சிறுமியும் அவர்களுடன் நான்காவது மாடிக்குச் சென்றுள்ளார்.  பெற்றோருடன் அங்கு நின்று கொண்டிருந்த போதே இச்சிறுமி தவறுண்டு மேலிருந்து கீழே நிலத்தில் வீழ்ந்துள்ளார். சுயநினைவு அற்ற நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயலளிக்காது உயிரிழந்துள்ளார்.  

No comments

Powered by Blogger.