சம்பூர் பிரதேச மக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு
(ஜே.எம்.இஸ்மத்)
யுத்த சூழ் நிலை காரணமாக கடந்த 2006ம் ஆண்டு திருகோணமலை, மூதூர் சம்பூர் பிரதேசத்திலிருந்து வெளியேறி தற்போது கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் ஆகிய பகுதிகளில் தற்காலிக முகாம்களில் வசிக்கும் சம்பூர் பிரதேச மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக ஐனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ அவர்களின் விஷேட பணிப்புரைக்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அம் மக்களை சந்தித்து உரையாடுவதையும் சம்பூர் பிரதேச பிரதான கடற்படை முகாம்யின் பொறுப்பதிகாரி, இதர கடற்படை உத்தியோகத்தர்களுடன் மீள் குடியேற்றம் செய்யும் இடங்கள் தொடர்பாக உரையாடுவதையும் படங்களில் கண்பதோடு முகாம்களில் வசிக்கும் மக்கள் இதன் போது தங்களுக்கு ஆறு மாத காலமாக உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து முதலமைச்சர் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வவின் கவனத்தில் கொண்டு வந்தார்.
Post a Comment