மலையக முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பைத் தோற்றுவிக்க நடவடிக்கை
தற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு துறைகளில் நெருக்கடி நிலமைகளை எதிர் நோக்கி வருகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப செயலாற்றாமல் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப காரியம் பார்த்து வருவதால் அவர்கள் விடயத்தில் முஸ்லிம் சமூகம் நம்பிக்கையிழந்து நிற்கின்றது. அதன் காரணமாக சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பலம் வாய்ந்த அழுத்தக் குழு ஒன்றினைக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அவசரமாகத் தற்போது தேவைப்படுகின்றது.
இந்த முயற்சியின் முதற் கட்டமாக மலையக முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பொன்று விரைவில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட இருக்கின்றது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் இந்த மலையக ஊடகவியலாளர் அமைப்பில் இணைந்து கொள்ள முடியும். இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பில் இணைந்து செயலாற்ற விரும்புகின்றவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் 0777275758, 0777842849, 0773160605 அல்லது UMO-129/2/6 D.S. சேனாநாயக்க வீதி, கண்டி என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
Post a Comment