Header Ads



ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்திற்குற்பட்ட மட்-ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயத்தில் இவ்வருட 2013 தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா வெள்ளிக்கிழமை 04.10.2013 பாடசாலையின் பிரதான மன்டபத்தில் இடம் பெற்றது.

முஸ்லிம் எயிட் நிருவனத்தின் அனுசரனையில் இடம் பெற்ற இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.ஏ.நஸீரா,பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம்.ஏ.சஹூர்,பிரதிஅதிபர் எஸ்.எச்.றிபாய்தீன்,முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஐ.எல்.சேட்.ஆப்தீன்,முஸ்லிம் எயிட் நிருவனத்தின் மாவட்ட இனைப்பாளர் எம்.ஏ.எம்அஸ்மி, முஸ்லிம் எயிட் நிறுவன வானவில் குடும்பத்தின் திட்ட உத்தியோகத்தர் எ.ஐP.எம்.பஹி உள்ளீட்ட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 2ம்இடம் பெற்ற அமான் அஸ்கர் என்ற மாணவனும், 164 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அக்ரம் இஸ்மாயில் என்ற மாணவனும் முஸ்லிம் எயிட் நிருவனத்தின்னூடாக கல்விக்கான மாதாந்த உதவி தொகையினை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சித்தியடைந்த மாணவர்கள் பிரதம அதிதியால் பரிசில் பெறுவதனையும்,பிரதம அதிதி உரையாற்றுவதனையும், படங்களில் கானலாம்.






No comments

Powered by Blogger.