நாட்டினுள் மீண்டும் தீவிரவாதம் தோற்றம்பெற இடமளிக்கப் போவதில்லை - இராணுவ தளபதி தயா ரட்ணாயக்க
நாட்டினுள் மீண்டும் தீவிரவாதம் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்ணாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நிலையில், தீவிரவாதத்தின் நிழல் இன்னும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில குழுவினர் மீண்டும் நாட்டில் குழப்பத்தை மேற்கொள்ள முனைகின்றார்கள். நாங்கள் படையினர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்ப்பட வேண்டும். இந்த பிரதேசத்தில் மீண்டும் ஒரு முறை தீவிரவாதம் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது. அவற்றை முறியடிப்பதற்கு பொறுப்புடன் செயற்படவேண்டும்.
இராணுவத்தினர் நாட்டின் தேவையின் பொருட்டே அன்றி அரசியலுக்காக செயற்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
படையினர் என்ற வகையில் நாங்கள் அரசியல் கட்சிகளுக்காக செயற்பட வில்லை. நாட்டை ஈடேற்றவே முனைகின்றோம். நாட்டின் ஸ்திரதன்மை, இனபேதமற்ற நிலையில், ஒற்றுமையாக வாழ்வற்கான சமூகத்தை தோற்றுவிக்கவே நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
Post a Comment