குற்றங்களில் ஈடுபடும் பௌத்த குருமார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் - நாளை திறக்கப்படுகிறது
கண்டியில் பௌத்த மதகுருமாருக்கு தனியான நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த துறவிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இந்த நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
நாளை கண்டியில் இந்த நீதிமன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.
பௌத்த துறவிகளுடன் தொடர்புடைய சகல வழக்குகளும் இந்த நீதிமன்றில் துரித கதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில நாட்களுக்குள் வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment