Header Ads



கஸாவத்தை முஸ்லிம் வித்தியாலயம் மண் சரிவில் சிக்கும் அபாயம் - பிரதேச செயலகம் முற்றுகை

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கஸாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் பிரதான கட்டிடம் மண்  சரிவு ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அதில் கல்வி பயிலும் தமது பிள்ளைகளுக்கும் ஆபத்தான நிலை உளள்தாகவும் கூறி இன்று 2013 10 17 அதன் மாணவ மாணவிகள்  மற்றும் பெற்றோர்கள் 150 க்கும் மேற்பட்டோர் அக்குறணை பிரதேச செயலக வளாகத்தை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இக் கட்டிடத்தை உடன் அகற்றுமாரு சிபாரிசு செய்திருந்த போதும் மாணவ மாணவிகள் தற்போதும் அக் கட்டிடத்தில் கல்வி பயிலுவதனால் அவர்களது உயிரிக்கு ஆபத்துள்ளதாக இங்கு குழிமி இருந்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மத்திய மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் ரிஸ்வி பாரூக், அக்குறணை பிரதேச சபையின் தவிசாலர் ஏ.எம்.எம்.சிம்சான், அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபிர்; ஆகியோர் கட்டுகஸ்தோட்டை வலய கல்வி காரியாலய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இப் பிரச்சினைக்கு உடன் மாற்று தீர்வு ஒன்று வழங்குவதாக அதிகாரிகள் உத்தரவளித்த பின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் இவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

No comments

Powered by Blogger.