Header Ads



ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் பொலிஸாரினால் தேடப்படுகிறார்

(nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேறுமாறு வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின்போது மாத்தறையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சுதத் சந்திரசேகர மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹடபிடிய ஆகியோரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர மேலதிக விசாரணைகளில் வெளிப்படும் விடயங்களுக்கு அமைய, மேலும் சில சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மாத்தறை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சுதத் சந்திரசேகர மற்றும் கித்சிறி கஹடபிடிய ஆகியோர் தொடர்பான தகவல்களை 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.