கறுவா ஏற்றுமதியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க - பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம
சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம காலியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்த கருத்து :-
"எனது அமைச்சு சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பாகும். எனக்கு தற்போது பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. கறுவாத் தடிகளை சிறிகொத்தவிற்கு அனுப்புமாறு பலரும் கூறுகின்றனர். ஏனெனில் அங்குதான் தடிகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் சண்டையிட்டுக் கொள்ள கறுவாத் தடிகளையே பயன்படுத்துவர். எனவே கறுவாவை பெற்றுக் கொண்ட பின்னர் எஞ்சும் தடிகளை சந்தைப்படுத்த சிறிகொத்தாவுக்கு அனுப்ப முடியும் என சிந்தித்தேன். எனவே எமது கறுவா ஏற்றுமதியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். எனவே நாம் அனுப்பும் கறுவாத் தடிகளை சண்டையிட்டுக் கொள்வதற்காக அவர்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்க வேண்டும்"
சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு பிரதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பதற்காக இரண்டு மாடுகளை விடுவிக்கும் நிகழ்வின் போதே நிஷாந்த முத்துஹெட்டிகம இதனைக் தெரிவித்தார்.
Post a Comment