அரபு, முஸ்லிம் உலக விவகாரங்களைத் தீர்க்க ஐ. நா. தவறிவிட்டது - சவுதி கவலை
(tn) அரபு மற்றும் முஸ்லிம் உலக விவகாரங்களைத் தீர்ப்பதற்கு ஐ. நா. சபை தவறிவிட்டதாகக் காரணம் காட்டி சவூதி அரேபியா தனது ஐ. நா. பொதுச் சபை உரையை ரத்துச் செய்துள்ளது.
ஐ. நா. பொதுச் சபை உரையை சவூதி ரத்துச் செய்வது வரலாற்றில் இது முதல் முறை என இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அரபு மற்றும் முஸ்லிம் உலக விவகாரங்களை ஐ. நா. சபை கையாளும் விதம் குறித்து சவூதி அதிருப்தி கொண்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பலஸ்தீன பிரச்சினையை ஐ. நாவால் தீர்க்க முடியாதிருப்பது மற்றும் சிரியா பிரச்சினை குறித்தும் சவூதி அதிருப்தி கொண்டுள்ளது.
அத்துடன் குறிப்பிடத்தக்க நாடுகள் ஐ. நாவில் தீர்மானம் நிறைவேற்றும் சக்தியாக இருப்பதற்கும் சவூதி அதிருப்தி கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் சவுத் அல் பைசால் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற அட்ட வணைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment