பானந்துறையில் விஷத்தன்மை கொண்ட எறும்பு - வெளிநாட்டு நிபுணர்களும் ஆய்வு
(nf) பானந்துறையில் ஒருவகை எறும்பு இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் குடம்பிகள் ஆய்வு குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த பகுதிகளில் இருந்து குறித்த எறும்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க கூறியுள்ளார்.
பானந்துறையில் காணப்படும் இந்த எறும்புகள், சாதாரண எறும்புகளை விடவும் அளவில் பெரிதாகவுள்ளதாக பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எறும்புகள் விஷத்தன்மை கொண்டதாகவும், இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக டொக்டர் அனில் சமரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு வருகை தந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நுளம்பு ஆய்வு தொடர்பான விசேட நிபுணரின் ஊடாக, இந்த எறும்புகள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக டொக்டர் அனில் சமரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment