ஹங்கேரியில் மாணவிகள் நடத்திய அசிங்கமான போராட்டம்
ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர்.
ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுபாடு விதித்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களது பேராசிரியை தலைமையில் ஆடை கட்டுபாட்டை கண்டித்து வகுப்பறைக்கு நிர்வாணமாக வந்து பாடம் படித்தனர். நிர்வாகம் தனது விதிகளை தளர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் பல்கலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் நிர்வாணமாக வகுப்பறைகளில் பங்கேற்ற புகைப்படங்கள் உள்ளூர் நாளேடுகளில் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்ப்பு பெரிதானதை அடுத்து மாணவர்களுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment