Header Ads



முஸ்லிம் காங்­கிரஸ் - சல்மான் குர்­ஷித்­ சந்திப்பு

13ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தைப் பாது­காப்பதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்­பதன் மூலம் இந்­நாட்டில் சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் அதி­காரம் பகி­ரப்­ப­டு­வ­தற்கு உதவி புரிய வேண்டும். சிறு­பான்­மை­யி­னரின் உணர்­வுகள் மதிக்­கப்­பட வேண்­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்­ஷித்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

கொழும்பு - சின­மன்­கிரான்ட் ஹோட்­டலில் நேற்று மாலை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­ட­னான முஸ்லிம் காங்­கி­ரஸின் சந்­திப்பின் போதே இவ்­வாறு கேட்­டுக்­கொண்டார். சந்­திப்பில் அமைச்சர் பஷீர் சேகு­தா­வூத்தைத் தவிர அனைத்து முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர்.

சந்­திப்பின் பின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்,

வட மாகா­ணத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் அக­தி­களின் மீள்­கு­டி­யேற்றம், இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான பகிர்வுஇ அதி­கா­ரப்­ப­கிர்வு உட்­பட பல விட­யங்கள் பற்றி கலந்­து­பே­சினோம்.

கட்­சியின் அர­சியல் நிலைப்­பாடு, கொள்­கைகள் என்­பன விளக்­கப்­பட்­டன. சந்­திப்பு மிகவும் சாத­க­மாக அமைந்­தது. மற்றும் கடந்த மாகாண சபைத் தேர்­தலில் கட்சி அடைந்­துள்ள வெற்றி என்­பன எடுத்து விளக்­கப்­பட்­டன. மாகாண சபை­களின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட மாட்­டாது என்ற எமது நிலைப்­பாட்­டி­னையும் தெரி­வித் தோம்.

இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தில் சில மாவட்­டங்கள் விடு­பட்­டுள்­ள­தையும், அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தையும் கூறினோம். இந்­திய வீட­மைப்­புத்­திட்டம் வட மாகா­ணத்தில் அர­சியல் பாகு­பா­டின்றி முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் வேண்­டிக்­கொண்டோம் என்று தெரி­வித்தார்.

இந்திய வெவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில், இந்திய - இலங்கை நட்புறவு தொடர்ந்தும் பேணப்படும். முஸ்லிம் காங்கிரஸுடன் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது என்று கூறினார். vi

No comments

Powered by Blogger.