'நேர்மையின் விழுமியங்களை புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள தவறியது
'கடந்த 30 வருடகால முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இருக்கவில்லை. அதனால்தான் பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளையும் அதிகாரங்களையும் முஸ்லிம் அரசியல் பெற்றுக்கொண்ட போதிலும் வட கிழக்கு முஸ்லிம்களின் முதன்மையான பிரச்சினைகளுக்குக் கூட இதுவரை தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை'. இவ்வாறு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
கடந்த 18.10.2013 அன்று காத்தான்குடி குட்வின் சந்தியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பொயக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்ற போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,
'முஸ்லிம்களின் உரிமைகளை வென்று தருவதாகவும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகவும் கூறுகின்றவர்கள் தமது அரசியலை கடந்த 30 ஆண்டு காலமாக மிகவும் வெற்றிகரமாகவும் இலாபகரமாகவும் நடாத்தி வருகின்றனர். ஆனாலும், வட கிழக்கு முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் நீண்ட கால மற்றும் நாளாந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட அவர்களால் இதுவரை எதுவித தீர்வையும் காண முடியவில்லை.
வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணப்படும் காணிப்பிரச்சினைகள் ஆகியன இதற்கு மிகச் சிறந்த இரண்டு உதாரணங்களாகும். பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளும் அரசியல் அதிகாரங்களும் கைகளில் இருந்தும் கூட நமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன..?
இறைவனின் 'பறகத்' என்கின்ற அருள் நமது அரசியலில் இருக்கவில்லை என்பதே காரணமாகும் என்பதை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும்.
பெரும் பெரும் பொருளாதார வசதிகளை கொண்ட ஒரு செல்வந்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருக்கிறது. திருப்திகரமாக சாப்பிடக்கூட முடிவதில்லை. அவரது பிள்ளைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சீரழிந்து செல்கிறார்கள். குடும்பத்தில் இன்னும் பல விடயங்களில் நிம்மதியில்லை. மொத்தத்தில் அவர் சேர்த்து வைத்திருக்கும் பொருளாதாரம் அவருக்கான நோயற்ற வாழ்வையோ அல்லது சீரான குழந்தைகளையோ அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கையையோ பெற்றுக் கொடுக்கவில்லை.
அப்படியென்றால் அவரிடத்தில் அத்தனை பொருளாதார வசதிகள் இருந்தும் அவருக்கு இறைவனுடைய அருள் கிட்டவில்லை என்பதுதான் அர்த்தமாகும். இதே நிலைதான் முஸ்லிம் அரசியலிலும் 30 வருட காலமாக நிலவி வருகிறது.
முஸ்லிம் தனித்துவ அரசியல் என்பது பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளைக் கண்டிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. அரசாங்கங்களை மாற்றியமைத்திருக்கிறது. பெரும் பெரும் அமைச்சுப் பதவிகளைக் கொண்டிருக்கிறது.
இறுதியாக கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் கூட அச்சபையின் ஆட்சியைத் தீர்மாணிக்கின்ற பெரும் சக்தியாக மாறியது. இப்படியெல்லாம் இருந்தும் கூட முஸ்லிம்களின் எந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவர்களால் காண முடிந்தது..?
கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகளில் ஒன்றுக்காவது இதுவரை தீர்வு காணமுடியவில்லை. வட மாகாண முஸ்லிம்களுக்கு உத்தியோக பூர்வ அகதி அந்தஸ்தைக்கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. முஸ்லிம்களின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றையாவது ஒருமித்த குரலில் பேசும் அளவுக்கு முஸ்லிம் அரசியலை ஒற்றுமைப்படுத்த முடியவில்லை.
எனவேதான் முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இல்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. இதற்கான காரணம் என்ன..? நமது 30 வருட கால தனித்துவ அரசியல் வழிமுறைகளை திரும்பிப் பார்க்கின்ற போது இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கக்கூடிய வகையில் அது அமைந்திருக்கவில்லை.
தேர்தல் வெற்றிகளையும் தனி நபர் பதவி அதிகாரங்களையும் மாத்திரமே இலக்காகக் கொண்டதனால் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்க வேண்டிய நேர்மையான விழுமியங்கள் எதனையும் முஸ்லிம் அரசியல் கொண்டிருக்க வில்லை.
பொய்இ ஏமாற்றுஇ சுத்துமாத்துஇ கழுத்தறுப்புஇ வாக்குறுதி மீறல்கள்இ கள்ளவாக்கு போன்ற சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள்இ வன்முறைகள்இ ஊழல் மோசடிகள் மற்றும் ஏனைய ஹறாமான செயற்பாடுகள் என்பனவே நமது முஸ்லிம் அரசியலில் மூலதனங்களாக இத்தனை காலமும் இருந்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் தேர்தல்களில் நாம் வெற்றியடைந்தாலும் கூட இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளும் விடயத்தில்நம்மால் வெற்றிபெற முடியவில்லை.
எனவேதான் இதற்கு தீர்வான மாற்று அரசியல் வழிமுறையினை கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த மண்ணில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடக்கி வைத்தது. முஸ்லிம் சமூகம் எவ்வாறான ஒழுக்க தார்மீக பண்பாட்டு விழுமியங்களை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும் என எமது மார்க்கம் எமக்கு கட்டளையிட்டிருக்கிறதோ அவற்றை முழுமையாக கடைப்பிடிக்கின்ற ஒரு புதிய அரசியல் வழி முறையினை நாம் தொடக்கி வைத்தோம்.
நீதிஇ தர்மம்இ உண்மைஇ சகோதரத்துவம்இ மனித நேயம்இ ஜனநாயகம்இ வெளிப்படைத் தன்மைஇ சுய நலம் மற்றும் இனவாதம் கடந்த தேசப்பற்று என்பவற்றை முற்று முழுதாக கடைப்பிடிக்கின்ற அரசியல் வழிமுறையாக அது இருக்கிறது.
இவ்வாறான வழிமுறை ஒன்றின் மூலமாகவே எமது மக்களுக்கான விமோசனத்தினை இறைவனின் அருளுடனும் உதவியுடனும் பெற்றுக் கொடுக்க முடியும் என நாம் நம்புகின்றோம். ஆரம்ப காலங்களில் இவற்றை நாம் முன் வைத்த வேளையில் இவ்வாறான நல்ல விழுமியங்களைக் கொண்ட அரசியல் நடைமுறை சாத்தியமில்லை என்று பலரும் கருதினர்.
எனினும் இவ்வாறான ஒரு நேர்மையான அரசியல் வழிமுறை மாத்திரமே நமது மக்களுக்கு மாத்திரமின்றி முழு நாட்டினதும் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்ற அடிப்படையில் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைத்தோம். அந்த நேர்மையான உழைப்பிற்கு இறைவனின் அருள் கிடைத்திருக்கிறது என்பதனை வட மாகாணத்தில் நாம் பெற்றிருக்கும் அடைவுகள் நிரூபிக்கின்றன.
காத்தான்குடியில் இரண்டு நகர சபை உறுப்பினர்களையும்இ கிண்ணியாவில் ஒரு நகர சபை உறுப்பினரையும்இ கொண்டிருக்கின்ற ஒப்பீட்டளவில் சிறியதான Pஆபுபு தலைமை அரசியல் கூட்டமைப்பானது இன்று வட மாகாண முஸ்லிம்களின் இரண்டு தசாப்தகால பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க்ககூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறது.
வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும்இ புனர் வாழ்வும் என்பது அங்கு 95 வீதமளவில் பெரும் பாண்மையாக வாழும் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் உதவியுமின்றி சாத்தியப்படமுடியாத ஒன்றாகும். தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளின் உடன்பாடும் உத்தரவாதமும் இதற்கு மிகமிக அவசியமானது.
வட மாகாண முஸ்லிம்களின் அவலங்களை தேர்தல் கால மூலதனமாகப் பயன்படுத்தி அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட எவரும் இதனை இதுவரை செய்யவில்லை.
கடந்த 23 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருந்த இந்த அடிப்படைக் கடமையினை இன்று pmgg தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு நிறைவேற்றியிருக்கிறது.
அந்த வகையில்தான் தமிழ் மக்களின் அமோக அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வட மாகாண முஸ்லிம்களின் கௌரவமான மீள் குடியேற்ற புனர்வாழ்வு விடயங்களை உத்தரவாதப்படுத்தும் ஒரு வரலாற்று பெறுமதிமிக்க ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கு எம்மால் முடிந்திருக்கிறது. அதனடிப்படையில் எமது அரசியல் கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது எமது சொந்த கெட்டித்தனம் கிடையாது. எமது நேர்மையான அரசியல் வழிமுறைகளின் காரணமாக கிடைத்த இறைவனின் உதவியினாலும் அருளினாலுமே இது சாத்தியப்பட்டது. இந்த நேர்மையான சமூக அரசியல் வேலைத்திட்டத்தினை மேலும் மேலும் முன் கொண்டு செல்வதற்கும் அதன் மூலமாக முழு நாடும் பயன்பெறக்கூடிய அரசியல் பங்களிப்பை எமது சமூகம் செய்வதற்குமாக நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும். அதற்கதான முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நீங்கள் வழங்க வேண்டும்.'
அல்ஹம்து லில்லாஹ் சகோதரர் அப்துல் ரஹ்மானின் பேச்சு வரவேற்க்கதக்கது இந்த கருத்தை அதாவது இறையச்சம் இல்லாத காரணத்தாலும் அளவுக்கு அதிகமான புகழ் .நான் ஒருசில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும் தயவு செய்து யாரும் குறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் பிழைகள் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடவும் .நமது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களை ,சிலர் புகழும்போது ஈடற்ற தலைவர் ,ஒப்பற்ற தலைவர் அவருக்கு நிகராக யாரும் இல்லை என்ரெல்லாம் ,அவரை புகழ்வது .நான் அவரை புகல வேண்டாம் என்று சொல்லவில்ல .அவருக்கு கொடுக்க வேண்டிய அளவுக்கு மரியாதையை கொடுங்கள் .அவர் நம் சமுதாயத்துக்கு செய்த சேவை அளப்பரியது .அதற்காக நம் எல்லோரும் அவருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌசை கொடுக்க துஆ சயா வேண்டும் .ரசூல் (ஸல் )அவர்கள் சொன்னார்கள் கிறிஸ்தவர்கள் அளவு கடந்து சகோதரர் ஈசாவை புகழ்ந்து வாளிதவரியதுபோல் நீங்களும் என்னைப்புகந்து வாளிதவரி விடாதீர்கள் என்று சொன்னார்கள் .அதையும் நாம் மனதில் கொண்டு .ஒருவரை புகழ வேண்டும் .நான் அதோடு ,இதை ஒப்பிடவில்லை .ஒருவரை அளவு கடந்த புகழ் ஏற்ப்படும் பொது அது சிறிய இணைவைப்பில் ,கொண்டுபோய் சேர்த்துவிடும்னம் எல்லோரின் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்தருளுவனாக அஸ்ரப் அவர்களின் பவங்களை மன்னித்து அல்லாஹு ரப்பில் ஆலமீன் அவருக்கு உயர்வான சொர்க்கத்தை கொடுப்பானாக அமீன்( யாருக்கும் மனம் நோகும்படி இந்த கருத்து இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளவும் ) .
ReplyDeleteEng. Rahman, அவர்களே..! முதலில் இறைவனின் அருள், கோபம்.. போன்ற விடங்களை நீங்கள் கணித்துக் கூருவது சரியான விடயமாக தோன்றவில்லை அடுத்தது 30 வருட காலத்தில் நிறைய இந்த மக்களுக்கான சமூக சேவைகளும் மறுக்கப்பட்ட மறுக்கப்பட இருந்த உறுமைகள் பல வென்றேடுக்கப்பட்டுள்ளன இதில் குறிப்பாக மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை குறிப்பிடலாம். வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளில் மிக மிக காத்திரமான துணிச்சலான சேவைகளை அமைச்சர் ரிசாத் பதுயுதீன் செய்துள்ளார்கள். எனவே தயவு செய்து இவர்களின் பங்களிப்புக்களை கொச்சை படுத்த வேண்டாம்.
ReplyDeleteஉங்களுக்கு இன்னும் அனுபவமும் முதிர்ச்சியும் தேவைபடுகிறது ( இவை உங்களது பேச்சில் தென்படவில்லை ) சேர் பொன் இராமநாதன் ( ஜி ஜி பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம், பிரபாகரன்..) காலத்தில் இருந்து சம்பந்தன் வரை முஸ்லிம்களின் அரசியல் பயணத்தை கொஞ்சம் படியுங்கள் அப்போது விளங்கும் உங்களதும் உங்களது கட்சியின் நிலைமையும்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பயணம் என்பது புறக்கோட்டையில் உள்ள 2 ஆம் 3ஆம் குறுக்கு தெரிவில் வாகனம் செலுத்துவது போன்றது சும்மா அதிவேக பாதையில் வாகனம் செலுத்துவது போல் கதை விடாதீர்கள் அதே நேரத்தில் அப்பாவி மக்களையும் எதிர்கால சந்ததியினரை பிழையான தகவல்களை கொடுத்து வழி நடத்த முற்பட வேண்டாம்.