முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் ' நடா' பங்காற்றினார் - என்.எம். அமீன்
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமானார். ' நடா' என்று அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் 4 தசாப்தங்களாக பணியாற்றியதுடன் 1997 முதல் 2005 ஆம் ஆண்டுவரை முன்னாள் பிரதம ஆசிரியராகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை எஸ்.நடராஜா முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் பங்காற்றியவர் என முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் குறிப்பிட்டார். கடந்த வருடம் முஸ்லிம் மீடியா போரம் நடராஜாவை கௌரவித்ததை ஞாபகப்படுத்திய என்.எம்.அமீன், அவரது குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment