நாடுகடத்தப்பட்ட மாணவியின் நிபந்தனை
பிரான்ஸ் நாட்டில் சட்ட விரோதமாகக் குடியிருந்துவந்த லியானர்டோ திப்ராணி(15) என்ற பள்ளி மாணவி அவரது பெற்றோர் சகோதர சகோதரிகளுடன் இந்த மாதத் துவக்கத்தில் அவர்களது நாடான கொசொவோவிற்குத் திருப்பி அனுப்பபட்டார். அதேபோல் 19 வயது நிரம்பிய கட்சிக் கட்சட்ரயன் என்ற மாணவன் அவனது நாடான ஆர்மீனியாவிற்கு திருப்பி அனுப்பபட்டான்.
இந்த செய்கையானது பிரான்ஸ் நாட்டு மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் இறங்கத் தூண்டியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கடந்த 17 ஆம் தேதியன்று பிரான்சின் தலைநகரான பாரிசில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் செயல்பாடுகளையும் அவர்கள் தடுத்தனர். பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் சேர்க்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
திப்ராணி வெளியேற்றப்பட்டது சரியென்று குடிவரவுத்துறை தெரிவித்தபோதும், எதிர்காலத்தில் பள்ளி நேரங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவியதை அடுத்து பிரான்ஸ் அதிபர் பிரன்காய்ஸ் ஹாலன்டே அந்தப் பெண் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து தனது கல்வியைத் தொடர அனுமதி அளித்துள்ளார். ஆயினும் அவளது குடும்பத்தினர் திரும்பி வருவதற்கு அவர் அனுமதி அளிக்கவில்லை.
தன்னுடைய சகோதர, சகோதரிகளும் தடைப்பட்ட கல்வியைத் தொடர வேண்டும் என்பதினால் குடும்பத்தினருக்கும் பிரான்சில் தங்கியிருக்க அனுமதி கிட்டினால் மட்டுமே தான் திரும்பிவருவதாக திப்ராணி தெரிவித்துள்ளார்.
Post a Comment