Header Ads



கல்முனை மாநகர மேயர் பதவியை பொறுப்பேற்க காத்திருக்கிறேன் - நிசாம் காரியப்பர்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் தீர்மானத்தின் படி கல்முனை மாநகர மேயர் பதவியை பொறுப்பேற்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என கல்முனை மாநகர பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுநேரத்திற்கு முன்னர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் நவம்பர் மாதம் கல்முனை மாநகர அமர்வுகள் எனது தலைமையில் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறும் என்றும் நம்புகிறேன். கல்முனை மாநகர மேயராக பதவிவகித்த சிறாஸ் மீராசாஹிப் தனது பதவியிருந்து ராஜினாமா செய்வாரெனவும் எதிர்பார்க்கிறோம். அவர் மேர் பதவியை பொறுப்பு எடுக்குமுன்னரே அதாவது 2 வருடங்களுக்கு முன, தான் 2 வருடங்கள்தான் மேயர் பதவியிலிருப்பேன் என வாக்குறுதி வழங்கியுள்ளார். இன்று செவ்வாய்கிழமை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடமும் அவ்வாறே கூறியுள்ளார்.

இந்நிலையில் எந்தவித சிக்கலுமின்றி, ஊர் பிரதேச பாகுபாடின்றி சுமூகமாக எனக்கு கல்முனை மேயர் பதவி கிட்டுமென எதிர்பார்க்கிறேன். அதற்காக நான் காத்திருக்கிறேன்.

2 comments:

  1. People do not like you Mr.Kaariyapeyer, that's why you did not get preference votes, so waiting to get the seat is not reasonable, you must proof in next election that you will be a leader among Kalmunai public

    ReplyDelete
  2. இது வரை நாங்கள் கண்ட ஊழல் தலைமைகளைவிட மேயர் சிராஸ் ஊர் துவேசம் பாராது நல்லதையே செய்துள்ளார் இன்ஷா அல்லாஹ் இனிமேலும் செய்வார் என்று நம்புகின்றோம். அவரே இந்த கல்முனை மாநகர சபைக்கு பொருத்தமானவர்.
    இதுவரையும் ஒன்றுமே செய்யாமல் தனது வருமானத்தையும் பதவியையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை பதவி விலகச் சொல்லாமல் எந்தவித துவேசமும் பாராமல், ஊழலும் செய்யாமல் தனது சேவையை செய்து கொண்டிருக்கும் மேயரை பதவி விலகச் சொல்வது என்ன நியாயம்....???
    நாங்கள் ஓட்டுப் போட்டது 2 வருடங்களுக்கு அல்ல....

    ReplyDelete

Powered by Blogger.